செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeவிளையாட்டுCricketMendis, Karunaratne அரைச்சதம்: வலுவான நிலையில் இலங்கை அணி

Mendis, Karunaratne அரைச்சதம்: வலுவான நிலையில் இலங்கை அணி

Published on

spot_img
spot_img

New Zealand மற்றும் Sri Lanka அணிகளுக்கிடையிலான Test தொடரின் முதலாவது போட்டி இன்று Christchurch மைதானத்தில் ஆரம்பமானது. WTC இறுதி போட்டிக்கு தேர்வாவதற்கான மிக முக்கியமான தொடராக இலங்கை அணிக்கு இத் தொடர் அமைந்துள்ளமையால் மிகுந்த எதிர்பார்ப்புடன் களமிறங்கியது இலங்கை அணி.

ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற New Zealand அணி பந்துவீச்சை தெரிவுசெய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ஆரம்பத்தில் Oshada Fernando இன் விக்கெட்டை இழந்திருந்தாலும் Dimuth Karunaratne மற்றும் Kusal Mendis இன் சிறப்பான இணைப்பாட்டத்தில் ஓட்டங்களைக் குவித்தது. அதிரடியாக ஆடிய Kusal Mendis 83 பந்துகளில் 87 ஓட்டங்களைப் பெற்று சதம் பெறும் வாய்ப்பை இழந்து ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலேயே Dimuth Karunaratne உம் 50 ஓட்டங்களில் ஆட்டமிழக்க அனுபவ வீரர்களான Mathews மற்றும் Mendis இணை களம் கண்டது.

சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய Chandimal மற்றும் Mathews முறையே 39 மற்றும் 47 ஓட்டங்களில் ஆட்டமிழக்க பின்னர் களம் இறங்கிய Dhananjaya De Silva மற்றும் Rajitha ஆட்டமிழக்காமல் 39 ம‌ற்று‌ம் 16 ஓட்டங்களுடன் களத்தில் இருக்க முதல் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.

முதல் நாளில் வீசப்பட்ட 75 ஓவர்கள் நிறைவில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 305 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

Latest articles

இஸ்ரேலிய பிரதமருக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் பிடியாணை ……

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு உட்பட முக்கிய அதிகாரிகளிற்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணையை பிறப்பிக்க தயாராவதாக...

பரீட்சைத் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு ……

மே 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சாதாரணத் தர பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் என்பன நாளை...

இயந்திரங்களைப் பயன்படுத்திப் புதையல் தோண்டிய இருவர் கைது …….

பொலன்னறுவை உனகல வெஹெர பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புதையல் தோண்டியதாகக் கூறப்படும் இரண்டு சந்தேக நபர்கள் பொலிஸ்...

பாசிக் குடாவில் நீராடியவர் மாயம் தேடும் பணிகள் தீவிரம் …….

கல்குடா - பாசிக்குடா கடலில் நீராடிக் கொண்டிருந்த நபர்களில் ஒருவர் மாயமாகியுள்ளார். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) மாலை...

More like this