செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைஅக்கரைப்பற்று - கொழும்பு பேருந்து ஆரையம்பதியில் விபத்து ......

அக்கரைப்பற்று – கொழும்பு பேருந்து ஆரையம்பதியில் விபத்து ……

Published on

spot_img
spot_img

கொழும்பில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணிகளை ஏற்றி வந்த அதிசொகுசு பஸ் இன்று (30) அதிகாலை, மட்டக்களப்பு ஆரையம்பதி 4ம் கட்டை பகுதியில் விபத்தில் சிக்கி, பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதோடு, சில வர்த்தக நிலையங்கள் பெரும் சேதத்திற்குள்ளாகியுள்ளது.

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி 4ம் கட்டை பகுதியிலே இச்சம்பவம் ஏற்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சொகுசு பஸ் அதிகாலை 3.30 மணியளவில் 4ம் கட்டை பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியை விட்டு விலகி அருகிலுள்ள வர்த்தக நிலையங்கள் பலவற்றை உடைத்தெறிந்துள்ளது.

இவ் விபத்துச் சம்பவத்தின் போது சாரதி உட்பட்ட பலர் பலத்த காயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக காத்தான்குடி மற்றும் ஆரையம்பதி வைத்தியசாலைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். சாரதியின் தூக்கக் கலக்கமே விபத்துக்கு காரணம் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

விபத்து தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Latest articles

இஸ்ரேலிய பிரதமருக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் பிடியாணை ……

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு உட்பட முக்கிய அதிகாரிகளிற்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணையை பிறப்பிக்க தயாராவதாக...

பரீட்சைத் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு ……

மே 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சாதாரணத் தர பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் என்பன நாளை...

இயந்திரங்களைப் பயன்படுத்திப் புதையல் தோண்டிய இருவர் கைது …….

பொலன்னறுவை உனகல வெஹெர பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புதையல் தோண்டியதாகக் கூறப்படும் இரண்டு சந்தேக நபர்கள் பொலிஸ்...

பாசிக் குடாவில் நீராடியவர் மாயம் தேடும் பணிகள் தீவிரம் …….

கல்குடா - பாசிக்குடா கடலில் நீராடிக் கொண்டிருந்த நபர்களில் ஒருவர் மாயமாகியுள்ளார். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) மாலை...

More like this