செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைகுழந்தைகள் அழும்போது கையடக்கத் தொலைபேசி வழங்கும் பெற்றோருக்கு அதிர்ச்சி!

குழந்தைகள் அழும்போது கையடக்கத் தொலைபேசி வழங்கும் பெற்றோருக்கு அதிர்ச்சி!

Published on

spot_img
spot_img

முதலாம் தரத்தில் பிரவேசித்த மாணவர்களுக்கென பாடசாலையொன்றின் ஆசிரியர்கள் மற்றும் சுகாதாரத் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட கண், பற்கள் மற்றும் காது தொடர்பான பரிசோதனையின்போது ஆறு பிள்ளைகளுக்கு, 10 மற்றும் 12 மீற்றர் இடைவெளியில் உள்ள எழுத்துக்களை வாசிக்க முடியாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.

களுத்துறை மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

குழந்தைகள் அழும் போது ஆறுதல் கூறவும், அவர்களுக்கு உணவளிக்கவும், மருந்து மற்றும் திரவங்களை வழங்கவும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு முன்பள்ளி வயது முதலே கையடக்கத் தொலைபேசிகளை வழங்கி வருவதாக சுகாதாரத் துறை மற்றும் ஆசிரியர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

இது செய்யக்கூடாத ஒன்று எனவும் இதனால் எதிர்காலத்தில் பிள்ளைகளின் கல்வி கூட பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் எனவும் அவர்கள் மேலும் சுட்டிக்காட்டுகின்றனர்.

குறித்த பாடசாலையின் ஆசிரியர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் வைத்தியர்களின் தலையீட்டில் பிள்ளைகளை மேலதிக பரிசோதனைக்கு உட்படுத்தி உரிய மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட இலத்திரனியல் உபகரணங்களின் பாவனையே சிறு பிள்ளைகளின் கண் கோளாறுகளுக்குக் காரணம் என சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் முன்னாள் கண் வைத்திய நிபுணர் வைத்தியர் தர்மா இருகல்பண்டார நேற்று (07) தெரிவித்தார்.

Latest articles

யாழில் பரிதாபமாக உயிரிழந்த 19 வயது மாணவன்…..

மூச்சுவிடுவதற்கு சிரமப்பட்ட, கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் ஒருவர் நேற்றையதினம் திடீரென உயிரிழந்துள்ளார். இதன்போது கந்தரோடை, சுன்னாகம் பகுதியை சேர்ந்த...

இன்றைய நாள் ராசி பலன்கள்

குரோதி ஆண்டு – சித்திரை 17 - செவ்வாய்கிழமை (30.04.2024) நட்சத்திரம்: உத்திராடம் காலை 1.42 வரை பின்னர் திருவோணம்...

இலங்கையில் ஒரு நாளைக்கு இத்தனை கோடி சிகெரட்டுக்காக செலவாகிறதா? ……..

இலங்கை மக்கள் நாளொன்றுக்கு 52 கோடி ரூபாவை புகைபிடிப்பதற்கு செலவிடுவதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது. 83...

குடும்ப தகராறு கத்தி குத்தில் முடிந்தது மாமியார் பலி மனைவி படுகாயம் ……

மொனராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நக்கல பகுதியில் மருமகனின் கத்திக்குத்துக்கு இலக்காகி மாமியார் உயிரிழந்துள்ளதுடன் மனைவி படுகாயமடைந்துள்ளதாக மொனராகலை...

More like this