செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கையாழில் பரிதாபமாக உயிரிழந்த 19 வயது மாணவன்.....

யாழில் பரிதாபமாக உயிரிழந்த 19 வயது மாணவன்…..

Published on

spot_img
spot_img

மூச்சுவிடுவதற்கு சிரமப்பட்ட, கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் ஒருவர் நேற்றையதினம் திடீரென உயிரிழந்துள்ளார்.

இதன்போது கந்தரோடை, சுன்னாகம் பகுதியை சேர்ந்த சிறீதரன் சுஜிதரன் (வயது 19) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த மாணவனுக்கு கடந்த 27ஆம் திகதி மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்ட நிலையில் இணுவில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார். பின்னர் அடுத்த நாளான 28ஆம் திகதியும் இணுவில் வைத்தியசாலைக்கு சிகிச்சை சென்றுள்ளார்.

இவ்வாறு சிகிச்சை பெறுவதற்கு சென்றவருக்கு திடீரென உடல் மேலும் சுகயீனம் அடைந்த நிலையில் நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். மிகைப்படுத்தப்பட்ட இதயத்தசை வளர்ச்சியாலேயே குறித்த மரணம் நிகழ்ந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Latest articles

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட இரண்டு வர்த்தகர்கள் 

சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பென்ரைவ்களுடன் இரண்டு வர்த்தகர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு...

மீனவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 – 70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசுவதுடன், கல்பிட்டி, கொழும்பு,...

நாட்டில் போலி வைத்தியர்கள் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்

நாடளாவிய ரீதியில் சுமார் 40,000 போலி வைத்தியர்கள் இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இவ்வாறான சிலர் பல்வேறு...

இலங்கை மீனவர்கள் 21 பேர் இந்திய கடற்படையினரால் கைது….

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியைச் சேர்ந்த 21 மீனவர்கள் 5 படகுகளுடன் வியாழக்கிழமை (16) தமிழக கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்....

More like this