செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeசினிமா10 நாட்களில் செய்த கலெக்ஷன்...போட்டி போட்டு வசூல் செய்யும் அயலான், கேப்டன் மில்லர்.

10 நாட்களில் செய்த கலெக்ஷன்…போட்டி போட்டு வசூல் செய்யும் அயலான், கேப்டன் மில்லர்.

Published on

spot_img
spot_img

கேப்டன் மில்லர் மற்றும் அயலான் படங்கள் இந்த பொங்கல் பண்டிகைக்கு மோதிக்கொண்டது. இந்நிலையில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் இல்லை என தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் வசூலை வாரி குவித்து வருகிறார்கள். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷின் நடிப்பில் கேப்டன் மில்லர் உருவாகி இருந்தது.

படத்திற்கு ஆரம்பத்தில் நல்ல எதிர்பார்ப்பு இருந்தாலும் ஓரளவு வசூலில் மந்தம் அடைந்தது. ஆனால் இப்போது கேப்டன் மில்லர் படத்தின் வசூல் சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது. அதன்படி கிட்டத்தட்ட பத்து நாட்கள் முடிவில் 75 கோடி வசூலை நெருங்கி இருக்கிறது. மேலும் தமிழகத்தில் மட்டும் 35 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளது.

மேலும் சிவகார்த்திகேயனும் கேப்டன் மில்லருக்கு போட்டியாக அயலான் படத்தை இறக்கி இருந்தார். ஆரம்பத்தில் இருந்தே அயலான் படம் வசூலை வாரி குவித்து வருகிறது. அந்த வகையில் முதல் நாளிலே 3.45 கோடி வசூல் செய்திருந்தது. அடுத்த அடுத்த நாட்களில் பொங்கல் விடுமுறை என்பதால் அதிகம் வசூல் பெற்றது.

அதன்படி பத்தாவது நாள் முடிவில் கேப்டன் மில்லருக்கு போட்டியாக அயலான் படம் 75 கோடி வசூலை தொட்டுள்ளது. இவ்வாறு இரண்டு படங்களுமே ஒரே மாதிரியான வசூலை பெற்று வருவதால் இன்னும் சில நாட்கள் படம் ஓடினால் தான் யார் பொங்கள் ரேசில் வென்றார்கள் என்று தெரியவரும்.

மேலும் சிவகார்த்திகேயன் தொடர்ந்து சருக்களை சந்தித்து வந்த நிலையில் அயலான் அவரை தூக்கி விட்டுள்ளது. அதோடு தனுஷுக்கும் கேப்டன் மில்லர் படம் கை கொடுத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். மேலும் இரு படங்களும் விரைவில் 100 கோடி கிளப்பில் இணைகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Latest articles

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதி…..

இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இலங்கையில் முட்டை விலையை கட்டுப்படுத்தும்...

புத்தளத்தில் வலம்புரி சங்குகளுடன் ஒருவர் கைது…..

புத்தளம் - பாலாவி பகுதியில் இரண்டு வலம்புரி சங்குகளை எட்டு இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்ய முயற்சித்த இளைஞர்...

அதிக வெப்பநிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை…..

நாட்டில் நிலவும் அதிக வெப்பநிலை மற்றும் மனித உடலுக்கு ஏற்படக்கூடிய பாதகமான நிலைமைகள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன. இந்த நாட்களில்...

இன்றைய நாள் ராசி பலன்கள்

குரோதி ஆண்டு – சித்திரை 23 - திங்கட்கிழமை - (06.05.2024) நட்சத்திரம் : ரேவதி மாலை 4.39...

More like this