செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஉலகம்துருக்கி-சிரியா நில நடுக்கம் பலி எண்ணிக்கை 2,300 ஆக உயர்வு!

துருக்கி-சிரியா நில நடுக்கம் பலி எண்ணிக்கை 2,300 ஆக உயர்வு!

Published on

spot_img
spot_img

துருக்கி- சிரியா எல்லையில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கிலோமீட்டர் (14.2 மைல்) தொலைவில் 24.1 கிலோமீட்டர் (14.9 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் தாக்கியது. மேலும் 100 ஆண்டுகளுக்கு பிறஜு இப்பகுதியைத் தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இதுவாகும். ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் துருக்கி, சிரியாவின் எல்லை நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கின. இந்த நிலநடுக்கம் இஸ்ரேல், லெபனான் போன்ற அண்டை நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது. கடுமையான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. அதிகாலை என்பதால் வீடுகளில் அனைவரும் உறங்கிக்கொண்டிருந்தபோது நிலநடுக்கம் ஏற்பட்டு கட்டிடங்கள் இடிந்து அதன் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிக்கொண்டனர். இந்த நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை மீட்க துருக்கி – சிரியாவின் மீட்புக்குழுவினர் களமிறக்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 2300க்கும் மேற்பட்டவர்கள் பேர் உயிரிழந்துள்ளனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்து உள்ளனர்.துருக்கியில் குறைந்தது 912 பேர்; சிரியாவின் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் குறைந்தது 350 க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளனர் அவர்களை மீட்கவும் மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Latest articles

இன்றைய வானிலை தொடர்பான அறிவித்தல் …….

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். இன்றைய வானிலை...

கல்வியியற் கல்லூரி புதிய ஆட்சேர்ப்புக்காக 60,000 பேர் விண்ணப்பம்….

கல்வியியற் கல்லூரிகளுக்கான புதிய ஆட்சேர்ப்புக்காக 60,000 பேர் விண்ணப்பித்துள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார். இதன் பணிகள் அடுத்த வாரத்திற்குள்...

இன்றைய நாள் ராசி பலன்கள்

குரோதி ஆண்டு – சித்திரை 13 - வெள்ளிக்கிழமை (26.04.2024) நட்சத்திரம் : அனுஷம் காலை 3.01 வரை...

காலிமுகத் திடலுக்கு அருகாமையில் அதிநவீன ஹோட்டல், அதிசொகுசு வீட்டுத் தொகுதி திறப்பு ……

இந்தியாவின் ITC நிறுவனத்தினால் 300 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் குறித்த விருந்தகத்தின் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்நிறுவனம் இந்தியாவுக்கு...

More like this