செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஉலகம்டென்மார்க்கின் வரலாற்று சிறப்புமிக்க இடத்தில் தீ பரவல் ......

டென்மார்க்கின் வரலாற்று சிறப்புமிக்க இடத்தில் தீ பரவல் ……

Published on

spot_img
spot_img

டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனின் மத்தியிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பழைய பங்குச் சந்தை கட்டிடம் செவ்வாய்கிழமை (16) காலை தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

இந்த கட்டிடம் 17 ஆம் நூற்றாண்டின் போர்சன் நகரின் பழமையான கட்டிடங்களில் ஒன்றாகும்.

தீ பரவியதும் கட்டிடத்திற்குள் இருந்த அனைவரும் வெளியேறியுள்ளனர். இது வரை ஒருவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. சில வரலாற்று ஓவியங்களை மக்கள் விரைந்து மீட்டுள்ளனர்.

400 ஆண்டுகால டென்மார்க் கலாச்சார பாரம்பரியம் தீப்பிடித்து எரிந்துள்ளதாக அந்நாட்டு கலாச்சார அமைச்சர் ஜாகோப் ஏங்கல்-ஷ்மிட் தெரிவித்துள்ளார்.

இது “தி ஃபோல்கெட்டிங்” எனப்படும் டென்மார்க்கின் பாராளுமன்றம் மற்றும் கிறிஸ்டியன்ஸ்போர்க் அரண்மனை ஆகியவற்றிலிருந்து குறுகிய தூரத்திலுள்ள 1625 ஆம் ஆண்டுக்கு முந்தைய கட்டிடமாகும்.

இந்த பங்குச் சந்தை கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு பாதுகாப்பிற்காக பிளாஸ்டிக் உறைகளால் மூடப்பட்டிருந்தது. இது தற்போது டென்டமார்க் வர்த்தக சபையைக் கொண்டுள்ளது.

உள்ளூர் கைவினை கலைஞர் ஹென்ரிக் கிரேஜ், “இது ஒரு சோகமான நாள். இது எங்கள் நோட்ரே-டேம்“ என 2019 ஆம் ஆண்டு பாரிஸில் உள்ள நோட்ரே டேம் தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்துடன் ஒப்பிட்டு கூறியுள்ளார்.

Latest articles

யாழில் சுகாதார சீர்கேடுடன் இயங்கிய உணவகத்திற்கு சீல் வைப்பு….

திருநெல்வேலி பகுதியில் பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் உணவகங்கள் பரிசோதிக்கப்பட்டு, குறைபாடுகள் இனங்காணப்பட்ட உணவகங்களிற்கு, திருத்த வேலைகளிற்கான...

பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு…..

அனுமதியின்றி மே தினக் கொண்டாட்டங்களை காணொளி பதிவு செய்ய ட்ரோன்களை பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு ட்ரோன்களை பயன்படுத்துவதற்கு...

யாழில் பரிதாபமாக உயிரிழந்த 19 வயது மாணவன்…..

மூச்சுவிடுவதற்கு சிரமப்பட்ட, கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் ஒருவர் நேற்றையதினம் திடீரென உயிரிழந்துள்ளார். இதன்போது கந்தரோடை, சுன்னாகம் பகுதியை சேர்ந்த...

இன்றைய நாள் ராசி பலன்கள்

குரோதி ஆண்டு – சித்திரை 17 - செவ்வாய்கிழமை (30.04.2024) நட்சத்திரம்: உத்திராடம் காலை 1.42 வரை பின்னர் திருவோணம்...

More like this