செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைஉணவு வாங்க வந்த வெளிநாட்டவரை அச்சுறுத்திய நபர் கைது...

உணவு வாங்க வந்த வெளிநாட்டவரை அச்சுறுத்திய நபர் கைது…

Published on

spot_img
spot_img

கொழும்பு அளுத்கடை பகுதியில் உணவு வாங்க வந்த வெளிநாட்டவரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த நபர் 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும் 10 இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும் விடுவிக்கப்பட்டுள்ளார்.

வாழைத்தோட்ட பொலிஸார் சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

அளுத்கடை பகுதியில் உள்ள வீதியில் உணவு வாங்க வந்த வெளிநாட்டவரை தகாத வார்த்தைகளால் திட்டி அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் கடை உரிமையாளரை வாழைத்தோட்ட பொலிஸார் நேற்று (16) கைது செய்துள்ளனர்.

வெளிநாட்டவர் ஒரு கொத்து ரொட்டியின் விலையை கேட்டபோது, ​​1,900 ரூபா என்று கூறியதுடன் கடை உரிமையாளர் அதனை வாங்குமாறு அச்சுறுத்தியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று சமூகவலைத்தளங்களில் இந்த நாட்களில் வைரலாகி வருவதுடன், அந்த காணொளியின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொழும்பு 12 இல் வசிக்கும் 51 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.

Latest articles

நாட்டில் தங்கத்தின் விலை திடீரென உயர்வு …..

நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (30) ஒரு அவுன்ஸ் தங்கம் 693,179 ரூபாவாக...

அமெரிக்காவில் பாரிய துப்பாக்கி சூடு சம்பவம் ……

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணம் சார்லொடி நகரில் உள்ள குடியிருப்பில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 3 பொலிஸார் உயிரிழந்துள்ளதுடன், 4...

மதுபானசாலைகள் பூட்டு வெளியான தகவல் ……

மே முதலாம் திகதி புதன்கிழமை மே தின ஊர்வலங்கள் மற்றும் விசேட நிகழ்வுகள் நடைபெறும் பிரதேச செயலகப் பகுதிகளில்...

இரத்தின கற்களுடன் சிக்கிய கும்பல் …..

ஜா-எல பகுதியில் ஏழு கோடி ரூபா பெறுமதியான ஐந்து இரத்தினக் கற்களை விற்பனை செய்ய முயன்ற நான்கு சந்தேக...

More like this