செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைஇலங்கையின் முன்னாள் மெய்வல்லுநர் ஜாம்பவான் காலமானார் .........

இலங்கையின் முன்னாள் மெய்வல்லுநர் ஜாம்பவான் காலமானார் ………

Published on

spot_img
spot_img

இலங்கையின் முன்னாள் மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் இன்று (19) தனது 89ஆவது வயதில் அமெரிக்காவில் காலமானார்.

உயரம் பாய்தல் வீரரான நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் 1952 மற்றும் 1956ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை சார்பாக பங்கேற்ற பெருமையை பெற்றுள்ளார்.

1958ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் உயரம் பாய்தலில் 1.95 உயரத்துக்கு ஆற்றலை வெளிப்படுத்தி புதிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார்.

இதன் மூலம் சர்வதேச மெய்வல்லுநர் அரங்கில் இலங்கைக்கு தங்கப்பதக்கம் ஈட்டிக்கொடுத்த முதல் வீரர் என்ற வரலாற்று சிறப்பும் நாகலிங்கம் எதிர்வீரசிங்கத்துக்கு உள்ளது.

1962ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் உயரம் பாய்தலில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

யாழ்ப்பாணம் பெரியவிளானில் 1933 ஆகஸ்ட் 24ஆம் திகதி பிறந்த இவர் யாழ். மத்திய கல்லூரியின் பழைய மாணவராவார். பாடசாலை பருவத்திலேயே உயரம் பாய்தலில் அகில இலங்கை சாதனையை முறியடித்த பெருமையும் அவருக்கு உள்ளது.

Latest articles

போதைப்பொருட்களுடன் 8 பெண்கள் உட்பட 641 பேர் கைது….

நாடளாவிய ரீதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 8 பெண்கள் உட்பட 641 பேர் கைது...

இந்தோனேசியாவில் மூடப்பட்ட சர்வதேச விமான நிலையங்கள்…..

இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள ருயாங் தீவில் உள்ள எரிமலை ஒன்று கடந்த மாதம் கரும்புகையை கக்கியபடி...

இசையமைப்பாளர் பிரவீன்குமார் திடீர் மரணம்…..

தமிழில் 'இராக்கதன், மேதகு' ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் பிரவீன்குமார். 28 வயதான இவர் கடந்த சில நாட்களாகவே,...

யாழில் தனிமையில் இருந்த வயோதிப பெண்ணை சித்திரவதை செய்து கொள்ளை…..

யாழ் இருபாலை டச்சு வீதியில் தனிமையில் வசித்து வந்த வயோதிப பெண் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் குறித்த...

More like this