சுனாமி பேரலை அனர்த்தம் இடம்பெற்று நாளையுடன் 18 வருடங்கள் பூர்த்தியாகின்றன.
2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் திகதி காலை வேளை சுனாமி நாட்டை தாக்கியது. இதில் சுமார் 40 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
சுனாமி ஏற்பட்டதன் பின்னர் 2005ம் ஆண்டில் இலங்கையில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஸ்தாபிக்கப்பட்டது.
இதன்படி அனர்த்தங்களை முன்கூட்டியே அறிவித்தல், அனர்த்தங்களின் போது பாதிப்புக்களை குறைப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல் என்பன நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவது தொடர்பில் நாட்டு மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
இதனை முன்னிட்டு நாட்டின் பல பாகங்களிலும் நினைவு தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் நாளை காலை 9.25 லிருந்து 9.27 வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மக்களிடம் கோரிக்கை விடுத்திருக்கிறது.