செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஉலகம்டினிப்ரா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உக்ரைனின் கார்சன் நகரில் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

டினிப்ரா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உக்ரைனின் கார்சன் நகரில் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Published on

spot_img
spot_img

உக்ரைன் – ரஷியா இடையேயான போர் ஒரு வருடத்திற்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் இரு தரப்பிலும் பெரும் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. போரில் உக்ரைனுக்கு ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன. போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் உக்ரைனின் கார்சன் மாகாணத்தில் கக்ஹொவ்ஸ்கா என்ற அணையில் நேற்று திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக டினிப்ரா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உக்ரைனின் கார்சன் நகரில் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. உடைப்பு ஏற்பட்ட அணை ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் பகுதியில் உள்ளது. இதனால், இந்த அணையை உக்ரைன் தகர்த்ததாக ரஷியா குற்றஞ்சாட்டியுள்ளது. அதேவேளை, அணையை ரஷியா தகர்த்ததாக உக்ரைன் குற்றஞ்சாட்டி வருகிறது. இந்நிலையில் அணை உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் அண்டோனியோ குட்ரெஸ் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘இந்த தாக்குதல் மக்கள் மீதான போருக்கு கொடுக்கும் கொடூர விலைக்கு மற்றும் ஓர் உதாரணம். கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக பாதிக்கப்படுவோரின் அவலக்குரல் கேட்டுக் கொண்டே இருக்கிறது. இது நிறுத்தப்பட வேண்டும்.
குடிநீர், நீர் சுத்திகரிப்பு உபகரணங்கள் மற்றும் இதர உதவிகள் வழங்குவது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனிதநேய தொண்டு அமைப்புகள் உக்ரைன் அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன” என்று அவர் தெரிவித்தார்.

Latest articles

குழந்தைகளை தத்துக்கொடுக்கும் வீதம் இலங்கையில் அதிகரிப்பு…..

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாகக் குழந்தைகளை தத்துக்கொடுக்கும் வீதம் அதிகரித்துள்ளதாக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது . ஒரு வருடத்தில் சராசரியாக சுமார்...

கடமைக்கு சமூகமளிக்காத இராணுவத்தினர் பணி நீக்கம்….

விடுமுறை எடுக்காமல் கடமைக்கு சமூகமளிக்காத 9,000க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் இரண்டு வாரங்களுக்குள் பொதுமன்னிப்பின் கீழ் பணி நீக்கம் செய்யப்பட்டதாக...

யாழில் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு சொக்கலேட் விற்பனை செய்தவருக்கு கிடைத்த தண்டனை….

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு சொக்லேட்கள் மற்றும் பிஸ்கட் என்பவற்றை விற்பனை செய்தவரிடம் ஒரு இலட்ச ரூபாய் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்,...

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அரிசியை வழங்க மறுத்த கிராம அதிகாரி மீது கடும் தாக்குதல்…..

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அரிசியை விநியோகிக்க மறுத்த பெண் கிராம அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கு...

More like this