செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைகடலில் குழந்தை பிரசவித்த தாய் .....

கடலில் குழந்தை பிரசவித்த தாய் …..

Published on

spot_img
spot_img

யாழ்ப்பாணம் – நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவர் கடலில் குழந்தை பிரசவித்துள்ளார்.

நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு நேற்று புதன்கிழமை திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து , நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றுமாறு வைத்தியர் பரிந்துரைத்தார். அதனையடுத்து போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு, அம்புலன்ஸ் படகு தற்போது சேவையில் ஈடுபடாததால், பொதுமக்கள் போக்குவரத்து படகில் ஏற்றி குறிகாட்டுவான் நோக்கி அழைத்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடலில் படகு பயணித்துக்கொண்டிருந்த வேளை, பிரசவ வலி பெண்ணுக்கு அதிகரித்ததை அடுத்து, படகின் கீழ் தளத்தில் இருந்த ஆண்களை மேல் தளத்திற்கு அனுப்பி வைத்த பின்னர் , படகில் பயணித்த பெண்களே பிரசவம் பார்த்துள்ளனர்.

படகு குறிகட்டுவான் இறங்கு துறையை வந்தடைந்ததும், அங்கு தயார் நிலையில் நின்ற புங்குடுதீவு வைத்தியசாலையின் நோயாளர் காவு வண்டியில் தாயையும் சேயையும், யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்து சென்றனர்.

Latest articles

பாடசாலை விடுமுறை குறித்த வெளியான முக்கிய அறிவிப்பு…

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (22) மூடப்படும் என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் அறிவிப்பு...

காலி வர்த்தக நிலையத்தில் கொள்ளை…..

காலி இமதுவ பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையமொன்றிற்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்தவர்களிடம் துப்பாக்கியைக் காண்பித்து அச்சுறுத்தி பெறுமதியான பொருட்களை...

கனமழை காரணமாக ரயில் போக்குவரத்து தடை…..

நாட்டின் பல பகுதிகளில் தற்போது பெய்து வரும் கன மழை காரணமாக கொழும்பு – புத்தளம் ரயில் மார்க்கத்திலான...

முல்லைத்தீவில் உழவியந்திரம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழப்பு : ஐந்து பேர் படுகாயம்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேராவில் வளைவு பகுதியில் உழவியந்திரம் பெட்டி குடை சாய்ந்ததில் உழவியந்திரத்தில் பயணித்த இளைஞர்...

More like this