செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇந்தியாஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்: முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்: முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

Published on

spot_img
spot_img

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 233 ஆக அதிகரித்து இருக்கிறது இந்நிலையில் ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக சென்னையில் (03) காலை அரசு அதிகாரிகள், ரயில்வே அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்,

‘ஒடிசாவில் நேற்று சரக்கு ரயிலுடன் சென்னை நோக்கிவந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. விபத்து நடந்தவுடனேயே ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை தொடர்பு கொண்டு பேசினேன். மீட்புப் பணிகளை தேவையான உதவிகளைச் செய்ய தமிழகம் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளேன்.

ரயில் விபத்து நடந்த பகுதிக்கு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின்,  போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் விரைந்துள்ளனர். அங்கே அவர்கள் விபத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் சீராகக் கிடைப்பதை உறுதி செய்வார்கள்.

விபத்துக்குள்ளான ரயிலில் தமிழகத்தைச் சேர்ந்த எத்தனை பேர் பயணித்தனர் என்ற உறுதியான தகவல் இன்னும் பெறப்படவில்லை. ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் உடல்களைக் கொண்டுவர ஏற்பாடு செய்யப்படும். அதேபோல் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் (03)  நடைபெறவிருந்த கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் நூற்றாண்டு விழா தொடக்க விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. மற்றும் கலைஞர் நூற்றாண்டு விழாவை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிகள் அனைத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று ஒருநாள் மாநிலத்தில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சமும், ரயில்வே துறை சார்பில் ரூ.10 லட்சமும் நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் சார்பில் ரயில் விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதியும், படுகாயமடைந்தோருக்கு ரூ.1 லட்சம் நிவராண நிதியும் அளிக்கப்படும். காயமடைந்த, உயிரிழந்தவர்களின் முழு விவரம் தெரிய வந்த பின்னர் இந்த நிவாரணத் தொகையானது வழங்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

Latest articles

வவுனியாவில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது….

வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் திருட்டுச் சம்பவம் ஒன்று தொடர்பில் விசாரணைகளை முன்னெடுதத நிலையில்...

இம் மாதம் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் புள்ளி விபரம் வெளியானது ……

நாட்டில் இம்மாதம் முதல் 25 நாட்களில் 121,595 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி...

பிலிப்பைன்ஸ் அதிகூடிய வெப்பநிலை பதிவு பள்ளிகள் மூடப்பட்டன …….

பிலிப்பைன்ஸ் நாட்டில் கடும் வெப்பம் நிலவி வருவதால் 2 நாட்கள் அனைத்து அரசாங்க பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின்...

நாட்டில் தங்கத்தின் விலையில் திடீர் திருப்பம் ……

நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில் இன்று திங்கட்கிழமை (29) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 690,898...

More like this

வவுனியாவில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது….

வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் திருட்டுச் சம்பவம் ஒன்று தொடர்பில் விசாரணைகளை முன்னெடுதத நிலையில்...

இம் மாதம் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் புள்ளி விபரம் வெளியானது ……

நாட்டில் இம்மாதம் முதல் 25 நாட்களில் 121,595 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி...

பிலிப்பைன்ஸ் அதிகூடிய வெப்பநிலை பதிவு பள்ளிகள் மூடப்பட்டன …….

பிலிப்பைன்ஸ் நாட்டில் கடும் வெப்பம் நிலவி வருவதால் 2 நாட்கள் அனைத்து அரசாங்க பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின்...