செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇந்தியாடெல்லி, பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டெல்லி, பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Published on

spot_img
spot_img

காபுல், ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துகுஷ் மலைத்தொடரை மையமாகக் கொண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவாகி இருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கத்தின் மையம் தரைமட்டத்தில் இருந்து சுமார் 184 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானை தொடர்ந்து பாகிஸ்தான், தஜிகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலும், வட இந்திய மாநிலங்களான டெல்லி, பஞ்சாப், காஷ்மீர், அரியானா உள்ளிட்ட பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தலைநகர் டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் இரவு 10.22 மணிக்கு நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. டெல்லி அருகே உள்ள காசியாபாத், நொய்டா உள்ளிட்ட பகுதிகளிலும் நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. நிலநடுக்கம் ஏற்பட்டு கட்டிடங்கள் குலுங்கியதால், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கம் குறித்த விரிவான தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest articles

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அரிசியை வழங்க மறுத்த கிராம அதிகாரி மீது கடும் தாக்குதல்…..

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அரிசியை விநியோகிக்க மறுத்த பெண் கிராம அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கு...

காரில் திடீரென வெடித்து சிதறிய கைத்தொலைபேசி…..

ஹொரணை பகுதியில் காரின் முன் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கைத்தொலைபேசி திடீரென வெடித்துச் சிதறி தீப்பற்றி எரிந்த சம்பவம் அண்மையில்...

வேலைவாய்ப்பிற்காக இஸ்ரேல் செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு…..

இந்த வருடத்தின் முதல் நான்கு மாதத்திற்குள் 2,771 இலங்கையர்கள் வேலைவாய்ப்புகளுக்காக இஸ்ரேலுக்கு சென்றுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இலங்கை,...

வீதி அனுமதிப்பத்திரம் இல்லாத பஸ்களுக்கு அபராதம்…..

வீதி அனுமதிப்பத்திரம் இல்லாமல், சட்டவிரோதமான முறையில் பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ்களின் சாரதிகளைக் கைது செய்து வழக்குத் தொடர...

More like this