செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைதொல்பொருள் திணைக்களம் வசமானது கன்னியா வெந்நீர் ஊற்று

தொல்பொருள் திணைக்களம் வசமானது கன்னியா வெந்நீர் ஊற்று

Published on

spot_img
spot_img

திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்றின் வருமான முகாமைத்துவம் மற்றும் பராமரிப்புப் பணிகள் தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்துக்களின் வரலாற்று தொல்பொருள் தளமான கன்னியா வெந்நீர் ஊற்றுப் பகுதியில், பௌத்த மயமாக்கல் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், கன்னியா வெந்நீர் ஊற்று தொல்பொருள் தளத்தை, அனுராதபுர காலத்தைச் சேர்ந்த பௌத்த இடிபாடுகளைக் கொண்ட தனித்துவமான இடமாக அடையாளம் காண முடியும் என தொல்பொருள் திணைக்களத்தன் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டு முதல் கன்னியா வெந்நீர் ஊற்று, தொல்பொருள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதோடு, 2011 ஒக்டோபர் 9ஆம் திகதியிட்ட அரச வர்த்தமானி பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக திருகோணமலை பட்டிணமும் சூழல் பிரதேச சபை, திருகோணமலை மாவட்ட செயலகம் என்பன கன்னியா வெந்நீர் ஊற்றின் வருமான முகாமைத்துவம் மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வந்தன.

இந்த நிலையில், தொல்பொருள் திணைக்களம் தலையிட்டு கன்னியா வெந்நீர் ஊற்றின் மூலமாக கிடைக்கும் வருமானத்தை, திணைக்களத்தின் கணக்கின் ஊடாக அரச வருமானத்துடன் சேர்க்கும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

கடந்த முதலாம் திகதி தொடக்கம், திருகோணமலை பிரதேச தொல்பொருள் திணைக்களம் வருமான முகாமைத்துவம் மற்றும் பராமரிப்பு பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாக தொல்பொருள் திணைக்களத்தின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பணிகள் தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்க உள்ளிட்ட அதிகாரிகளின் தலைமையில் இடம்பெற்றுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest articles

உயர்தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பில் வெளியான அறிவிப்பு….

கல்விப் பொதுத் தராதர உயர்தர( 2023) பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் கடைசி வாரத்தில் வெளியிடப்படும் என்று பரீட்சை திணைக்கள...

மீண்டும் குறைக்கப்படவுள்ள மின்சார கட்டணம்….

மே மாத மின் கட்டண திருத்தம் மக்களுக்கு நிவாரணம் வழங்க எதிர்பார்ப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர்...

கிரிக்கெட் மட்டையால் தாக்கி மாணவன் படுகொலை….

பாடசாலை மாணவர்கள் இருவருக்கு இ​டையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், மாணவர் ஒருவர் கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார்....

இன்றைய நாள் ராசி பலன்கள்

குரோதி ஆண்டு – சித்திரை 19 - வியாழக்கிழமை (02.05.2024) நட்சத்திரம் : அவிட்டம் மாலை 11.03 வரை பின்னர்...

More like this