செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஅறிவியல்பரிகாரம், ஹோமம், யாகம், அன்னதானம் ஆகியவைகளைச் செய்வதால் தோஷம் நீங்குமா?

பரிகாரம், ஹோமம், யாகம், அன்னதானம் ஆகியவைகளைச் செய்வதால் தோஷம் நீங்குமா?

Published on

spot_img
spot_img

மருந்து மாத்திரை சாப்பிடுவதால் உடல்நலம் சரியாகுமா என்று கேட்பதைப் போல் இருக்கிறது கேள்வி.
நோய் தீருவதற்காகத்தானே மருத்துவர் மருந்து மாத்திரைகளைத் தருகிறார்.அதுபோலத்தான் இதுவும். நம்மை பீடித்திருக்கும் தோஷங்கள் நீங்குவதற்காகத்தான் பரிகாரம், ஹோமம், அன்னதானம் போன்ற தீர்வுகளைச் சொல்லி வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.அதே நேரத்தில் மருந்துகளை பரிந்துரைக்கும் மருத்துவர் அதற்குத் தகுதியானவராக இருக்க வேண்டும்.மெடிக்கலுக்குச் சென்று நாமே வியாதியைச் சொல்லி மருந்து சாப்பிடுதல் என்பது எத்தனை தவறானதோ அதே போல நாமாக பரிகாரத்தைச் செய்தல் என்பதும் தவறானதே.முதலில் பரிகாரம் வேறு, ஜோதிடம் வேறு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.ஜோதிடம் என்பது முழுக்க முழுக்க அறிவியல் சார்ந்த ஒன்று.
ஜோதிட நூல்கள் எதுவும் பரிகாரத்தைப் பற்றிச் சொல்லாது.ஜோதிடர் என்பவர் உங்களுக்கு உண்டாகியுள்ள தோஷத்தைப் பற்றித் தெளிவாக எடுத்துரைக்க இயலும். ஆனால்,அதே ஜோதிடர் பரிகாரத்தைச் சொல்வது என்பது தவறு.பரிகாரத்தைச் சொல்ல வேண்டும் என்றால் அந்த ஜோதிடர் அது குறித்த அறிவினைப் பெற்றவராக இருக்க வேண்டும்.அதாவது பரிகாரத்தைப் பற்றி ஜோதிட நூல்கள் அல்லாத சாந்தி குஸூமாகரம், சாந்தி ரத்னாகரம் முதலான நூல்கள் தெளிவாகச் சொல்கின்றன. இந்த நூல்களையும் தர்ம சாஸ்திரத்தையும் கற்றறிந்த வேத விற்பன்னர்கள் மட்டுமே சாந்தி பரிகாரங்களைச் சொல்லவும் செய்யவும் இயலும்.
உங்களுக்குத் தெளிவாகப் புரியும்படியாகச் சொல்ல வேண்டும் என்றால் ஜோதிட நிலையம் என்பது லேபரட்டரி என்று அழைக்கப்படும் பரிசோதனைக் கூடங்கள் போல என்று வைத்துக் கொள்ளலாம்.ஜோதிடர் என்பவர் பரிசோதனை செய்து ரிசல்ட்டைச் சொல்லும் லேப் டெக்னீஷியன்கள். அவ்வளவுதான்.இந்த நோயினுடைய கிருமியின் தாக்கம் அதிகமாக உள்ளது என்று டெக்னீஷியன்கள் சொல்வதைப் போல ஜோதிடர்கள் இந்த கிரகத்தால் இன்ன தோஷம் உண்டாகியிருக்கிறது என்பதைச் சொல்ல வேண்டும்.நோய்க்கான தீர்வினை மருத்துவர்தான் சொல்ல முடியும், அதற்குரிய மருந்தினை கற்றறிந்த மருத்துவர் மட்டுமே பரிந்துரைக்க வேண்டும்.
அதுபோலத்தான் தோஷத்திற்கான தீர்வினை அதாவது பரிகாரத்தினை சாஸ்திரத்தை கற்றறிந்த பெரியோர்கள் மட்டுமே சொல்ல இயலும்.
அதனை விடுத்து ஜோதிடர் சொல்லும் பரிகாரத்தைச் செய்தல் என்பது லேப்டெக்னீஷியன் பரிந்துரைக்கும் மருந்தினைச் சாப்பிடுவதற்கு ஒப்பானதாகவே அமையும்.
பரிகாரத்தைச் சொல்லும் தகுதியை அந்த ஜோதிடர் பெற்றிருக்கிறாரா, அதாவது வேதம், தர்மசாஸ்திரம், மற்றும் சாந்தி பரிகாரங்களைச் சொல்லும் நூல்களைப் படித்திருக்கிறாரா என்பதைத் தெரிந்து கொண்டு அவரிடம் பரிகாரத்தைக் கேளுங்கள்.இல்லாவிட்டால் உங்களுக்கு உண்டாகியிருக்கும் தோஷத்தினை மட்டும் அவரிடம் தெரிந்து கொண்டு அதற்குரிய பரிகாரத்தை சாஸ்திரம் அறிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு செய்யுங்கள்.
ஜோதிடம் வேறு பரிகாரம் வேறு என்று பிரித்துப் பார்த்து செயல்பட்டால் நீங்கள் செய்யும் பரிகாரம்,ஹோமம் அல்லது அன்னதானம் முதலியவை நிச்சயமாக முழுமையான பலனைத் தரும்.

Latest articles

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டில்ஷானின் தந்தை காலமானார்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் திலகரத்ன டில்ஷானின் தந்தை துவான் மொஹமட் ஜுனைதீன் உயிரிழந்துள்ளார்.இறக்கும் போது அவருக்கு...

அதிக வெப்பத்தால் யாழில் ஐவர் உயிரிழப்பு…..

யாழ்ப்பாணத்தில் நிலவும் அதிக வெப்பம் மற்றும் வெப்ப அலை காரணமாக 05 பேர் உயிரிழந்துள்ளனர் என யாழ்.போதான வைத்தியசாலையின்...

வானிலையில் இன்று முதல் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்….

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அடுத்த சில நாட்களில் (மே 08ஆம்திகதிக்குப் பின்னர்) மழை நிலைமையில் அதிகரிப்பு ஏற்படக் கூடிய...

கிளிநொச்சியில் கடும் வெப்பநிலையுடன் கூடிய வறட்சி ; குடிநீரின்றி வாடும் மக்கள்

கிளிநொச்சி மாவட்டத்தில் கடும் வெப்பநிலையுடன் கூடிய வறட்சி காரணமாக பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் 239குடும்பங்களைச்சேர்ந்த 732பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக...

More like this

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டில்ஷானின் தந்தை காலமானார்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் திலகரத்ன டில்ஷானின் தந்தை துவான் மொஹமட் ஜுனைதீன் உயிரிழந்துள்ளார்.இறக்கும் போது அவருக்கு...

அதிக வெப்பத்தால் யாழில் ஐவர் உயிரிழப்பு…..

யாழ்ப்பாணத்தில் நிலவும் அதிக வெப்பம் மற்றும் வெப்ப அலை காரணமாக 05 பேர் உயிரிழந்துள்ளனர் என யாழ்.போதான வைத்தியசாலையின்...

வானிலையில் இன்று முதல் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்….

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அடுத்த சில நாட்களில் (மே 08ஆம்திகதிக்குப் பின்னர்) மழை நிலைமையில் அதிகரிப்பு ஏற்படக் கூடிய...