செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
HomeCricketICC CWC 2023உலக கிண்ண போட்டிகளுக்கான தயார்படுத்தல் தொடர்பில் அதிருப்தி

உலக கிண்ண போட்டிகளுக்கான தயார்படுத்தல் தொடர்பில் அதிருப்தி

Published on

spot_img
spot_img

ICC கிரிக்கெட் உலக கிண்ணம் 2023 இந்தியாவில் October 5 ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

இந்தியாவில் நடைபெறும் உலக கிண்ணம் என்ற வகையில் ஊடகங்கள் மூலம் பெரிதும் மிகைப்படுத்தி கூறப்பட்ட தொடர் ரசிகர்களிடையே அதிருப்தியை தோற்றுவித்துள்ளது.

ஏற்கனவே உலகின் மிகப்பெரும் கிரிக்கெட் விழாவுக்கு எந்த ஒரு தொடக்க விழாவும் ஒழுங்கு செய்யாமையினால் ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள் போட்டிகளுக்கான தயார்படுத்தல் மற்றும் ஒளிபரப்பு தொடர்பாகவும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

10 மைதானங்களில் நடைபெறும் பிரதான தொடருக்கான பயிற்சி ஆட்டங்கள் Guwhati, Thiruvananthapuram மற்றும் Hyderabad மைதானங்களில் இடம்பெற்றிருந்தன. இப் போட்டிகளில் அனேகமான போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டிருந்த வேளையில் 3 போட்டிகள் முழுமையாக கைவிடப்பட்டிருந்தன. எனினும் இம் மூன்று மைதானங்களில் Hyderabad மைதானத்தில் மட்டுமே பிரதான போட்டிகள் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தன. எனினும் Hyderabad மைதானத்தில் இருக்கைகள் சேதமடைந்து ரசிகர்களின் பாவனைக்கு உகந்ததாக இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருந்தது.

இந்நிலையில் England மற்றும் Nez Zealnd அணிகளுக்கிடையிலான முதலாவது போட்டியின் போது Ahamedabad Narendra Modi மைதானத்தில் அனேகமான இருக்கைகள் காலியாகவே காணப்பட்டன. எனினும் மைதானத்தின் அதிகூடிய கொள்ளளவு காரணமாகவே அவ்வாறான தோற்றப்பாடு காணப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் இம் மைதானத்தின் இருக்கைகள் குறித்தும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். சுத்தமற்ற இருக்கைகளின் படங்களை வெளியிட்டு ரசிகர்கள் விமர்சித்துள்ளனர்.

பாகிஸ்தான் Multan மைதானத்தில் இடம்பெற்ற Asia Cup முதலாவது போட்டியில் ரசிகர்கள் குறைவாக இருந்தனர் என இந்திய கிரிக்கெட் ஆதரவாளர்கள் விமர்சித்திருந்த வேளையில் தற்சமயம் BCCI இனை கிரிக்கெட் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

Pakistan மற்றும் Netherlands அணிகள் மோதிய இரண்டாவது போட்டியில் Scoreboard இல் ஏற்பட்ட குழப்பங்களாலும் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மிகவும் வசதியான Cricket சபையாக கருதப்படும் BCCI இவ்வாறான ஒழுங்குகளை மேற்கொண்டமை தொடர்பாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

Latest articles

க.பொ.த சாதாரண தர பரீட்சை இன்று ஆரம்பம்….

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரணதர பரீட்சை இன்று ஆரம்பமானது. பரீட்சைக்கு நாடளாவிய ரீதியில் இம்முறை 4...

சிறுவர்களிடம் கைத் தொலைபேசியை வழங்குவது தொடர்பில் காவல்துறை எச்சரிக்கை…..

சிறுவர்களிடம் கைத்தொலைபேசிகளை வழங்குவது தொடர்பில், பெற்றோர்கள் அவதானமாக செயற்படுமாறு காவல்துறை வலியுறுத்தியுள்ளது. அவர்களுக்கு கைபேசிகளை வழங்குவதன் காரணமாக பல்வேறு வகையான...

கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்து விபத்துக்குள்ளானதில் 05 பேர் வைத்தியசாலையில் அனுமதி…..

கல்முனையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்து செங்கலடி சந்தியில் இன்று அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் பேருந்து சாரதி...

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதி…..

இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இலங்கையில் முட்டை விலையை கட்டுப்படுத்தும்...

More like this