செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைசிறுவர்களிடம் கைத் தொலைபேசியை வழங்குவது தொடர்பில் காவல்துறை எச்சரிக்கை.....

சிறுவர்களிடம் கைத் தொலைபேசியை வழங்குவது தொடர்பில் காவல்துறை எச்சரிக்கை…..

Published on

spot_img
spot_img

சிறுவர்களிடம் கைத்தொலைபேசிகளை வழங்குவது தொடர்பில், பெற்றோர்கள் அவதானமாக செயற்படுமாறு காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

அவர்களுக்கு கைபேசிகளை வழங்குவதன் காரணமாக பல்வேறு வகையான பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், யாழ்ப்பாணம் – தெல்லிப்பழையில் உள்ள வீடொன்றிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணொருவரின் சடலம் தொடர்பில், கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பகுதியில் வீடொன்றில் இருந்து சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த பெண்ணின் சடலமொன்று மீட்கப்பட்டிருந்தது.

அதேநேரம், சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின், 16 வயதுடைய மகன் காணாமல் போயுள்ளார்.அவர் தொடர்ந்தும் தேடப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் மகன், ‘மொபைல் கேம்ஸ்’ எனப்படும் கைபேசி விளையாட்டுக்களுக்கு அடிமையானவர் என தெரியவந்துள்ளது.

அத்துடன், 16 வயதுடைய குறித்த சிறுவன் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கலாம் எனவும், அவரது அறையில் சில வாசகங்கள் இரத்தத்தால் எழுதப்பட்டுள்ளதாகவும் காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், இதன்காரணமாக குறித்த 16 வயதுடைய சிறுவன் தமது தாயை கொலை செய்திருக்கலாம் என காவல்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது.

Latest articles

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகொலை

குருநாகல்-மீரிகம - மாலதெனிய, நால்ல பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை நபர் ஒருவரால் வீட்டில் வைத்து படுகொலை...

இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து

கேகாலை அவிசாவளை வீதியின் கொட்டபொல பிரதேசத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 26...

மண்சரிவு தொடர்பில் புதிய எச்சரிக்கை

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல மாவட்டங்களில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கடும் மழை,...

இந்தியா – இலங்கை கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு

நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை ஆரம்பிக்கும் திகதி மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக குறித்த கப்பல்...

More like this