செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஉலகம்ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி ரஸ்யாவின் மற்றுமொரு போர்க்கப்பலை அழித்த உக்ரைன்....

ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி ரஸ்யாவின் மற்றுமொரு போர்க்கப்பலை அழித்த உக்ரைன்….

Published on

spot_img
spot_img

ரஸ்யாவின் மற்றுமொரு யுத்தகப்பலொன்றை அழித்துள்ளதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.

விசேட படையணியான குரூப் 13 இன் கடல்சார் ஆளில்லா விமானங்கள் கருங்கடலில் சேர்கேய் கொட்டொவ் என்ற 1300 தொன் ரஸ்ய ரோந்து கப்பலை தாக்கி அழித்துள்ளன என உக்ரைன் தெரிவித்துள்ளது.

கிரிமியாவை தென்மேற்கு ரஸ்யாவிலிருந்து பிரிக்கும் கேர்ச் நீரிணையில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

மகுரா விஐந்து கடல்சார் ஆளில்லா விமானங்களின் தாக்குதல்கள் காரணமாக ரஸ்ய கப்பலிற்கு பலத்த சேதம் ஏற்பட்டது கப்பல் தீப்பற்றி எரிந்தது என தெரிவித்துள்ள உக்ரைன் இராணுவம் இந்த கப்பல் மூழ்கிவிட்டதாக பின்னர் தெரிவித்துள்ளது.

உக்ரைன் கடற்படை உக்ரைனின் டிஜிட்டல் மாற்றத்திற்கான அமைச்சுடன் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

முன்னரும் இந்த கப்பலை தாக்கினோம் ஆனால் இந்த முறை நிச்சயமாக அழித்துவிட்டோம் என உக்ரைனின் பாதுகாப்பு புலனாய்வு பிரிவை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

Latest articles

பல்கலைக்கழக மாணவிக்கு ரயிலில் தொல்லை கொடுத்த இளைஞர்கள் கைது…..

பல்கலைக்கழக மாணவிக்கு தொல்லை கொடுத்த 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஹட்டன் ரயில் நிலையத்தில் வைத்து அவர்கள் இவ்வாறு கைது...

தாழ்நிலப் பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக ஆறுகளை அண்டிய தாழ் நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாக...

இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி….

கெக்கிராவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில்...

போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வர்த்தகர் ஒருவர் கைது….

சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட 60 இலட்சம் ரூபா பெறுமதியான “குஷ்” போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து...

More like this