செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஉலகம்விசா இன்றி கனடாவுக்கு பயணம் - 13 நாட்டவருக்கு அடித்த அதிர்ஷ்டம்

விசா இன்றி கனடாவுக்கு பயணம் – 13 நாட்டவருக்கு அடித்த அதிர்ஷ்டம்

Published on

spot_img
spot_img

13 நாடுகளைச் சேர்ந்தவர்கள், 6.6.2023 முதல் விசா இன்றி கனடாவுக்கு விமானம் மூலம் பயணம் செய்யலாம் என கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமைத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, 13 நாடுகளைச் சேர்ந்த கடவுச்சீட்டுக்களை வைத்திருக்கும் பயணிகள், Temporary Residence Visa என்னும் தற்காலிக விசா இல்லாமலே கனடாவுக்கு பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்றாலும், இந்த சலுகை, அந்த 13 நாடுகளைச் சேர்ந்தவர்கள், கடந்த 10 ஆண்டுகளில் கனடா விசா வைத்திருந்தவர்களாகவோ அல்லது தற்போது செல்லத்தக்க United States non-immigrant visa என்னும் அமெரிக்க தற்காலிக விசாவோ வைத்திருப்பவர்களாக இருந்தால் மட்டுமே அவர்களுக்குப் பொருந்தும் என்றொரு நிபந்தனை உள்ளதை மறுப்பதற்கில்லை.

பிலிப்பைன்ஸ், மொராக்கோ, பனாமா, ஆன்டிகுவா மற்றும் பார்புடா, செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ், செயிண்ட் லூசியா, செயிண்ட் வின்சண்ட் மற்றும் கிரனடைன்ஸ், ட்ரினிடாட் மற்றும் டொபாகோ, அர்ஜெண்டினா, கோஸ்டா ரிக்கா, உருகுவே, செஷல்ஸ், தாய்லாந்து.

விடயம் என்னவென்றால், ஏற்கனவே 50க்கும் மேற்பட்ட நாட்டவர்களுக்கு விசா இல்லாமல் கனடாவுக்கு பயணிக்கும் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், அவர்களில் பெரும்பாலானோருக்கு விமானம் மூலம் கனடா வருவதற்கு, மின்னணு பயண அங்கீகாரம் Electronic Travel Authorization (eTA) தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

Latest articles

இலங்கையில் முதல் முறையாக ‘AI’ செய்தி வாசிப்பாளர்கள்….

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் (SLRC) செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை (AI) பயன்படுத்தி இரண்டு செய்தி வாசிப்பாளர்களை செய்தி வாசிக்கச்...

யாழில் 30 கிலோவிற்கும் அதிக கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது….

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட திடீர் விசேட நடவடிக்கையின் போது 30 கிலோ 500 கிராம் கேரளா...

போதைப்பொருள் வாங்க பணம் கேட்டு ஏழு வயது மகனை கொடூரமாக தரையில் அடித்து காயப்படுத்திய தந்தை கைது….

போதைப்பொருள் வாங்க பணம் கேட்டு மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஏழு வயது சிறுவனைத் தரையில் அடித்துப் பலத்த காயப்படுத்திய...

புதிய கிராம சேவையாளர்களுக்கான நியமனம் அறிவிப்பு…..

கிராம சேவையாளர் தரம் 3 இற்கான புதிய ஆட்சேர்ப்பு பட்டியல் இன்று (06) உள்நாட்டலுவல்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில்...

More like this