செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைவவுனியா பொலிஸார் பொது மக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு ......

வவுனியா பொலிஸார் பொது மக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு ……

Published on

spot_img
spot_img

வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக பல மோசடிகள் இடம்பெறுவதாகவும் அதற்கு பொலிஸாரும் உடந்தை என தெரிவித்து நேற்றைய தினம் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இதனை தொடர்ந்து வன்னி பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய அறிவுறுத்தலுக்கமைவாக செயல்பட்ட தலைமை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயத்திலக்க தன் தலைமையிலான குழுவினருடன் இன்று புதன்கிழமை (24) அதிகாலை வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக மோசடிகளில் ஈடுபட்டுவருபவர்கள் என அடையாளம் காணப்பட்ட ஆறு பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை தடுத்து வைத்து விசாரணை மேக்கொண்ட பின்னர் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, வுனியா தலைமை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயத்திலக்க அவர்கள் எதிர்வரும் நாட்களில் கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக ஏதேனும் மோசடிகள் இடம்பெறுமாயின் தனது உத்தியோகபூர்வ தொலைபேசி இலக்கமான 0718593520 என்ற இலக்கத்தை தொடர்பு கொண்டு அறிவிக்குமாறும் பொதுமக்களுக்கு அறிவித்தல் வழங்கியுள்ளார்.

Latest articles

இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து

கேகாலை அவிசாவளை வீதியின் கொட்டபொல பிரதேசத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 26...

மண்சரிவு தொடர்பில் புதிய எச்சரிக்கை

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல மாவட்டங்களில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கடும் மழை,...

இந்தியா – இலங்கை கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு

நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை ஆரம்பிக்கும் திகதி மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக குறித்த கப்பல்...

இன்றைய நாள் ராசி பலன்கள்

குரோதி வருடம் வைகாசி மாதம் 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 19.05.2024 மேஷம் : குடும்ப விஷயங்களை கவனகமாக கையாளவும்....

More like this