செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கையாழில் அதிகளவு ஹேரோயின் பவித்ததால் அலுவலக ஊழியர் மரணம்..

யாழில் அதிகளவு ஹேரோயின் பவித்ததால் அலுவலக ஊழியர் மரணம்..

Published on

spot_img
spot_img

ஊசி மூலம் அளவுக்கதிகமான போதைப் பொருளை எடுத்துக் கொண்ட இளைஞன் உயிரிழந்த நிலையில் குறித்த இளைஞனுடன் போதைப் பொருளை எடுத்துக்கொண்ட மேலும் 3 இளைஞர்களை பொலிஸார் தேடிவரும் நிலையில் அவர்கள் தலைமறைவாகியுள்ளனர்.

தலங்காவில் பிள்ளையார் கோவில் திருநெல்வேலி பகுதியை சேர்ந்த 25 வயதான கிறிஸ்டி சதீஷ்குமார் டனிஷ்ரன் என்ற இளைஞனே உயிர் இழந்துள்ளார்.

இவர் நேற்று மாலை நான்கு நண்பர்களுடன் ஒன்றாக சேர்ந்து ஹெரோயின் ஊசி ஏற்றியுள்ளார்.நான்காவதாக இவர் ஊசியினை பரிமாற்றி ஏற்றுக் கொண்ட பொழுது, நரம்பு ஊடாக காற்றின் அழுத்தம் அதிகரித்துள்ளது.

அதன் பின்னர் அவர் சுவாச பிரச்சனைக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
குறித்த இளைஞன் யாழ்ப்பாணம் திணைக்களம் ஒன்றில் அலுவலக உதவியாளராக கடமையாற்றுபவர் எனவும் தெரியவந்துள்ளது.
அதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்று பரிசோதனையில், இளைஞன் அளவுக்கு அதிகமாக போதைப்பொருளை ஊசி மூலம் உடலினுள் உட்செலுத்திக் கொண்டமையாலேயே மரணம் சம்பவித்துள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் , குறித்த இளைஞனும் , அவரது நண்பர்கள் மூவருமாக போதைப்பொருளினை ஊசி மூலம் உடலினுள் உட்செலுத்திக்கொண்டுள்ளனர்.நண்பர்கள் மூவரும், போதைப்பொருளை உட்செலுத்திய பின்னர் மிகுதியான போதைப்பொருளை முழுவதுமாக உயிரிழந்த இளைஞன் உட்செலுத்தியுள்ளார். அவ்வாறு அளவுக்கு அதிகமாக போதைப்பொருளை உட்செலுத்திக்கொண்டமையால் மயக்கமுற்று விழுந்த இளைஞனை,

போதையில் மயங்கி உள்ளதாக நினைத்து , போதை தெளியும் என காத்திருந்துள்ளனர். சுமார் 2 மணி நேரம் ஆகியும் இளைஞன் அசைவற்று காணப்பட்டமையால் , இளைஞனை மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி இளைஞன் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் கோப்பாய் பொலிஸார், உயிரிழந்த இளைஞனுடன் சம்பவ தினத்தன்று போதைப்பொருளை ஊசி மூலம் உட்செலுத்திய ஏனைய மூவரை அடையாளம் கண்டுள்ள நிலையில் அவர்கள் தலைமறைவாகியுள்ளனர்.

தலைமறைவாகியுள்ள மூவரையும் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். ஏனைய மூவரையும் கைதுசெய்து விசாரணைகளை முன்னெடுத்தலே அவர்களுக்கு போதைப்பொருள் வழங்கும் நபர்களை அடையாளம் காணமுடியும் என பொலிஸார் தெரிவித்தனர்.

அதேவேளை, யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளை ஊசி மூலமாக உட்செலுத்தியதில் இதுவரை 15 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர் எனவும் உயிரிழந்தவர்கள் 30 வயதிற்கும் குறைந்தவர்கள் என வைத்திய சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest articles

பேருந்து கட்டணம் குறைப்பது தொடர்பில் வெளியான அறிவிப்பு….

டீசல் விலை குறைக்கப்பட்டாலும் பேருந்து கட்டணத்தை குறைக்க இயலாது என பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஜூலை மாதத்திலேயே பேருந்து கட்டணங்களை...

விருந்துபசார நிகழ்வில் ஏற்பட்ட தகராறில் பல்கலை மாணவர்கள் கைது….

பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசார நிகழ்வொன்றில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் 12 பல்கலை மாணவர்கள் கைது...

டெல்லியில் 60க்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்….

டெல்லி, தேசிய தலைநகர் வலயப் பகுதிகளில் அமைந்துள்ள 60 க்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.இந்த வெடிகுண்டு...

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிப்பு…..

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1,700 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொட்டகலையில் இடம்பெற்ற மே தின நிகழ்வில்...

More like this