செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇந்தியாமத்தியப்பிரதேசத்தில் எரிவாயு ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து

மத்தியப்பிரதேசத்தில் எரிவாயு ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து

Published on

spot_img
spot_img

மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூர் பகுதியில் எரிவாயு ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகி உள்ளது. மேற்கு வங்கத்தின் ஷாலிமாரில் இருந்து சென்னை வரும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் ஒரு சரக்கு ரயில் என 3 ரயில்கள் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தின் பஹானகா பஜார் ரயில் நிலையம் அருகே கடந்த 2ம்தேதி விபத்துக்குள்ளாயின.இதில் 288 பேர் பலியாகினர். உலகை உலுக்கிய இந்த கோர ரயில் விபத்து துயரம் இன்னமும் தொடருகிறது.

இந்நிலையில் மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் பகுதியில் எரிவாயு ஏற்றி சென்ற ஒன்று தடம் புரண்டது. சரக்கு ரயிலின் 2 பெட்டிகள் திடீரென தடம் புரண்டதால் பதற்றம் ஏற்பட்டது. ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள உள்ள ஷாபுரா பிடோனி நிலையத்தில் உள்ள பாரத் பெட்ரோலியம் கிடங்கு அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.LPG எரிவாயுவை, பாரத் பெட்ரோலியம் நிறுவனத்திற்கு சொந்தமான சேமிப்பு கிடங்கில் நிரப்புவதற்காக சென்றபோது விபத்து ஏற்பட்டது.

சரக்கு ரயில் பெட்டிகள் தடம் புரண்டதால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அப்பகுதியில் ரயில் சேவைகளில் பாதிப்பும் ஏற்படவில்லை என ரயில்வே துறை தகவல் அளித்துள்ளது. ஜபல்பூர் பகுதியில் ரயில் பெட்டிகள் தடம் புரண்ட இடத்தில் மீட்பு பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.

Latest articles

குழந்தைகளை தத்துக்கொடுக்கும் வீதம் இலங்கையில் அதிகரிப்பு…..

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாகக் குழந்தைகளை தத்துக்கொடுக்கும் வீதம் அதிகரித்துள்ளதாக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது . ஒரு வருடத்தில் சராசரியாக சுமார்...

கடமைக்கு சமூகமளிக்காத இராணுவத்தினர் பணி நீக்கம்….

விடுமுறை எடுக்காமல் கடமைக்கு சமூகமளிக்காத 9,000க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் இரண்டு வாரங்களுக்குள் பொதுமன்னிப்பின் கீழ் பணி நீக்கம் செய்யப்பட்டதாக...

யாழில் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு சொக்கலேட் விற்பனை செய்தவருக்கு கிடைத்த தண்டனை….

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு சொக்லேட்கள் மற்றும் பிஸ்கட் என்பவற்றை விற்பனை செய்தவரிடம் ஒரு இலட்ச ரூபாய் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்,...

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அரிசியை வழங்க மறுத்த கிராம அதிகாரி மீது கடும் தாக்குதல்…..

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அரிசியை விநியோகிக்க மறுத்த பெண் கிராம அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கு...

More like this