செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇந்தியாதளபதி விஜய்யின் அரசியல் வருகையால் நிம்மதியை தொலைத்த சில தலைவர்கள்!

தளபதி விஜய்யின் அரசியல் வருகையால் நிம்மதியை தொலைத்த சில தலைவர்கள்!

Published on

spot_img
spot_img

கடந்த வாரம் விஜய் தனது கட்சியின் பெயர் ‘தமிழக வெற்றி கழகம்’ என அறிவித்து அரசியல் களத்தை கலக்கினார். அவரது அரசியல் வருகையால் முக்கியப் புள்ளிகளின் தூக்கம் போய்விட்டது. வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளர்களில் விஜய்யும் ஒருவராக இருப்பதால், அவரை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் திணறி வருகிறது ஆளும் திமுக.

விஜய் கட்சி தொடங்கிய பிறகு உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தாலும், ஒருபுறம் அவருக்கு பயம். இதேபோல் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், ‘நாம் தமிழர் கட்சியை நோக்கி இளைஞர்கள் அதிகளவில் வருகிறார்கள். இதற்கு விஜய் தொடங்கிய தமிழ்நாடு வெற்றிக் கழகம் தடையாக இருக்காது’ என்று ஒரு பேட்டியில் தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொள்கிறார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தற்போது நல்ல நேரம் இல்லை. அ.தி.மு.க., கட்சி இரண்டாக உடைந்து கிடக்கும் நேரத்தில், விஜய்யின் அரசியல் பிரவேசம் எடப்பாடியை பீதியில் ஆழ்த்தியுள்ளது. “மற்ற அரசியல் கட்சி தலைவர்களை விட நான் அதிகம் உழைத்துள்ளேன். அடுத்த முதல்வர் நானே’ என்று கூறும் நடிகரும், சமத்துவக் கட்சித் தலைவருமான சரத்குமார், விஜய் கட்சி தொடங்கியதற்கு வாழ்த்து தெரிவித்தாலும், அவருக்குள்ளும் அச்சம் இருக்கிறது.
பாட்டாளி மக்கள் கட்சிக்கு விஜய்யின் தவேக கட்சி கடும் போட்டியாக மாறும் என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸும் பதற்றத்தில் உள்ளார். விஜய்யின் அரசியல் வருகையால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உண்மையிலேயே தூக்கத்தை இழந்துள்ளார். 2026ல் தமிழகத்தில் ஆட்சி அமைப்போம் என தொடர்ந்து மேடைகளில் பேசி வந்தார்.

ஆனால், தற்போது 2026ல் அரசியல் களத்தில் நின்று பல மேடைகளில் ஆட்டுக்குட்டியாக கதறும் அண்ணாமலைக்கு தண்ணிர் கொடுக்கப் போகிறார் விஜய். விஜய்யின் வேகத்தைப் பார்த்தால் தன் கனவு கனவாகிவிடுமோ என்று அண்ணாமலை அஞ்சுகிறார். 2026ல் எப்படியாவது முதலமைச்சராகிவிட வேண்டும் என்ற விஜய்யின் உறுதியே இந்த பிரபலங்களுக்கும் அச்சத்தையும் பதட்டத்தையும் தருகிறது.

Latest articles

இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து

கேகாலை அவிசாவளை வீதியின் கொட்டபொல பிரதேசத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 26...

மண்சரிவு தொடர்பில் புதிய எச்சரிக்கை

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல மாவட்டங்களில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கடும் மழை,...

இந்தியா – இலங்கை கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு

நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை ஆரம்பிக்கும் திகதி மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக குறித்த கப்பல்...

இன்றைய நாள் ராசி பலன்கள்

குரோதி வருடம் வைகாசி மாதம் 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 19.05.2024 மேஷம் : குடும்ப விஷயங்களை கவனகமாக கையாளவும்....

More like this