செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைஇலங்கையர்களுக்கு ஜப்பானில் வேலை வாய்ப்பு....

இலங்கையர்களுக்கு ஜப்பானில் வேலை வாய்ப்பு….

Published on

spot_img
spot_img

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் வேண்டுகோளுக்கு இணங்க எமது தொழிலாளர்களுக்கு ஜப்பானின் கட்டிட சுத்திகரிப்பு துறையில் தொழில் வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளது .

இதற்கானத் தேர்வு எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ளது .தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் நேற்று (28) ஜப்பான் கட்டிடத் துப்புரவுப் பணியாளர்கள் சங்கத்தினருக்கும் அமைச்சருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு அமைச்சர் தெரிவித்தார்.

இவ் வாய்ப்புகளை இலங்கை தொழிலாளர்களுக்கு வழங்கியமைக்காக ஜப்பான் அரசுக்கும் அந்நாட்டின் நீதியமைச்சருக்கு பாராட்டுக்களும் நன்றிகளும் அமைச்சரால் தெரிவிக்கபப்ட்டது.

ஜப்பானிய மொழி புலமை மட்டம் N4 விண்ணப்பதரிகள் SSW விசா பிரில் விண்ணப்பிக்க முடியும் . இதற்கென தகுதிகான் தேர்வு எழுத்து மற்றும் செயன்முறையில் நடாத்தப்படும்.

SWW மட்டம் 27 முகாமைத்துவ பதவிகளுக்கு விண்ணப்பிப்பதுடன் அது நிரந்தர வதிவிடத்திற்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பையும் வழங்கும் என இக்கலந்துரையாடலில் பேசிய ஜப்பானிய பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.

இப் பரீட்சைக்கு ஏற்றவாறு பாடப்புத்தகங்கள் மற்றும் காணொளிகள் பரீட்சாதிகளுக்கு வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.இந்த கலந்துரையாடலில் ஜப்பானிய கட்டிடத் துப்புரவுப் பணியாளர்கள் சங்கத்தின் சிறப்புப் பிரதிநிதியாக சச்சியோ சுகியாமா கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது

Latest articles

போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வர்த்தகர் ஒருவர் கைது….

சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட 60 இலட்சம் ரூபா பெறுமதியான “குஷ்” போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து...

புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை…..

புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களுடன், சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த ஒருவரை கைது...

யாழில் தரமற்ற இறைச்சிக் கொத்து : உணவகத்துக்கு சீல் வைப்பு….

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியிலுள்ள உணவகம் ஒன்றில் நேற்று முன்தினம் மாலை ஒருவர் குறித்த கடையில் இறைச்சி கொத்தினை வாங்கி...

பொலிஸ் உத்தியோகத்தர் நீரில் மூழ்கி உயிரிழப்பு…..

குளியாப்பிட்டிய பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். துப்பாக்கி சுடுதல் பயிற்சிக்காக பொலிஸ்...

More like this