செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைஇலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா...

இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா …….

Published on

spot_img
spot_img

மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் 07.04.2024 அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார்.

இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட வைத்தியர்கள், முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Latest articles

வாகன இறக்குமதியை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை…..

வாகன இறக்குமதியை அடுத்த வருடம் முதல் மீண்டும் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில்...

இந்தோனேசியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் 11 பேர் உயிரிழப்பு….

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். பட்டமளிப்பு விழாவிற்காக மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து...

கிணற்றில் விழுந்து குழந்தை உயிரிழப்பு…..

மெதகம, ஈரியகஹமட பிரதேசத்தில் பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து குழந்தையொன்று உயிரிழந்தது.ஈரியகஹமட கெதவின்ன பிரதேசத்தில் வசிக்கும் 04 வயதுடைய குழந்தையே...

போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது…..

ஓட்டுமாவடியில் இருந்து மட்டக்களப்புக்கு கார் ஒன்றில் சட்டவிரோதமாக போதை மாத்திரைகளை கடத்திச் சென்ற ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது...

More like this