செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைஇன்றைய வானிலை தொடர்பான அறிவித்தல் ......

இன்றைய வானிலை தொடர்பான அறிவித்தல் ……

Published on

spot_img
spot_img

வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல்,மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் மொனராகலை மாவட்டத்திலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.

இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில்,

மத்திய , சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

காலி தொடக்கம் மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரப் பிராந்தியங்களில் காலை வேளையிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய,சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்.

பொத்துவில் தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 ‐ 30 கிலோமீற்றர் வேகத்தில் தென்கிழக்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும்.

Latest articles

ஞாயிற்றுக்கிழமை விசேட போக்குவரத்து திட்டம்

யுத்தத்தில் உயிரிழந்த இராணுவ வீரர்களை நினைவுகூரும் தினத்தை முன்னிட்டு போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதன்படி எதிர்வரும் 19...

இ-பாஸ்போர்ட் முறை அடுத்த சில மாதங்களில் அறிமுகப்படுத்த நடவடிக்கை…..

இலங்கையில் இ-பாஸ்போர்ட் முறையை அடுத்த சில மாதங்களில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் திரான்...

இன்றைய நாள் ராசி பலன்கள்

குரோதி ஆண்டு – வைகாசி 5 - சனிக்கிழமை (18.05.2024) நட்சத்திரம் : உத்திரம் காலை 1.39 வரை பின்னர் திதி...

சாதாரண தரப் பரீட்சையில் மேலும் சில மோசடிகள்…

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் மேலும் சில மோசடிகள் குறித்து இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி,...

More like this