குரோதி ஆண்டு – சித்திரை 9 – திங்கட்கிழமை – (22.04.2024)
நட்சத்திரம் : அஸ்தம் மாலை 8.50 வரை பின்னர் சித்திரை திதி : சதுர்த்தசி காலை 4.20 வரை பின்னர் பௌர்ணமி
யோகம் : சித்த யோகம் நல்லநேரம் : காலை 6.30 – 7.30 / மாலை 4.30 – 5.30
திங்கட்கிழமை சுப ஓரை விவரங்கள் (காலை 6 முதல் 7 வரை, பகல் 12 முதல் 2 வரை, இரவு 6 முதல் 9 வரை, 10 முதல் 11 வரை) சுபகாரியங்கள் நகை வாங்க, ஆடை அணிய, கடை திறக்க சிறந்த நாள்
மேஷம் : சமூக அந்தஸ்து உள்ளவர்களின் தொடர்பு கிட்டும். பிரபலங்களின் சிநேகிதம் கிடைக்கும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
ரிஷபம் : குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும். மனதில் உயர்வான எண்ணங்கள் உதிக்கும். பேச்சில் கடுமையை தவிர்க்கவும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.
மிதுனம் : எதிர்பார்த்த வேலைகள் தாமதின்றி முடியும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். நண்பர்களால் மனக்கசப்பு உருவாகலாம். புது தொழில் யோகம் அமையும்.
கடகம் : முக்கிய காரியங்களுக்கு நேரில் செல்வது நல்லது. எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். காரிய அனுகூலம் உண்டாகும். உத்யோக மாற்றம் ஏற்படும்.
சிம்மம் : திட்டமிட்டு செய்யும் காரியம் வெற்றி பெரும். பெற்றோரிடம் வீண் வாக்குவாதம் ஏற்படும். நெருங்கிய உறவினர்கள் உதவுவர். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.
கன்னி : குடும்பத்தில் குழப்பான சூழல் காணப்படும். புது வாகனம் வாங்கும் யோகம் உண்டு. பயணங்கள் அனுகூலமான திருப்பங்களை தரும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
துலாம் : குடும்பத்தில் இருந்த எதிர்ப்புகள் நீங்கும். முன் கோபத்தை குறைப்பது நல்லது. வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
விருச்சிகம் : திட்டமிட்ட காரியங்கள் சிறப்பாக நடக்கும். வெளிவட்டாரத்தில் நல்ல வரவேற்பு கிடைக்கும். மனக்குழப்பம் நீங்கும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.
தனுசு : குடும்ப செலவுகள் கட்டுக்கடங்காமல் செல்லும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்ற முடியும். புரியாத விஷயங்கள் கூட எளிதில் புரிய வரும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
மகரம் : எதிர்காலம் பற்றி நிறைய திட்டங்கள் இருக்கும். யோகா, தியானத்தில் மனம் ஈடுபாடு கொள்ளும். தேடி வந்தவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் ஏற்படும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
கும்பம் : எடுத்த வேலையை முடிப்பதிற்குள் அலைச்சல் ஏற்படும். ஆன்மீகம் எண்ணம் மேலோங்கும். மறைமுக எதிர்ப்புகள் வந்து போகும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.
மீனம் : குடும்பத்தில் உங்கள் மதிப்பு உயரும். முக்கிய காரியங்கள் அனுகூலமாக முடியும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தொழில், வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும்.