செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைஇலங்கையில் இடம்பெற்ற பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நபர் கைது!

இலங்கையில் இடம்பெற்ற பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நபர் கைது!

Published on

spot_img
spot_img

இலங்கையில் இடம்பெற்ற கொலைகள் மற்றும் ஏனைய குற்றச் செயல்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த ‘பூரு மூனா’ என அழைக்கப்படும் ரவிந்து சங்க டி சில்வா அவிசாவளை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் நேற்று பிற்பகல் (17-03-2023) அவிசாவளை நீதிமன்ற வளாகத்திற்கு அருகிலுள்ள வீதியில் காரில் காத்திருந்த போது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்

மேலும் மேல்மாகாண தெற்குப் பிரிவு பொலிஸாரினால் சந்தேகநபருக்கு எதிராக அவிசாவளை நீதிமன்றத்தினால் வெளிநாட்டுப் பயணத்தடையும் விதிக்கப்பட்டது.

இதேவேளை, 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் திகதி ஹன்வெல்ல பிரதேசத்தில் உணவகம் ஒன்றின் உரிமையாளரை சுட்டுக் கொன்றதாக ‘போரு மூனா’ மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சந்தேகநபர் 2023 பெப்ரவரி 24 ஆம் திகதி வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முற்பட்டார், ஆனால் விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டார், பின்னர் அவர் விமான நிலையத்திலிருந்து தப்பிச் செல்ல இரண்டு பௌத்த பிக்குகள் உதவியிருந்தார்.

மேலும், 28 வயதான சந்தேகநபர் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட பல கொலைகளில் பிரதான துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபருக்கு அடைக்கலம் வழங்கிய ஹொரணை, மில்லனிய பிரதேசத்தைச் சேர்ந்த தம்பதியரும் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்படத்தக்கது.

Latest articles

குழந்தைகளை தத்துக்கொடுக்கும் வீதம் இலங்கையில் அதிகரிப்பு…..

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாகக் குழந்தைகளை தத்துக்கொடுக்கும் வீதம் அதிகரித்துள்ளதாக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது . ஒரு வருடத்தில் சராசரியாக சுமார்...

கடமைக்கு சமூகமளிக்காத இராணுவத்தினர் பணி நீக்கம்….

விடுமுறை எடுக்காமல் கடமைக்கு சமூகமளிக்காத 9,000க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் இரண்டு வாரங்களுக்குள் பொதுமன்னிப்பின் கீழ் பணி நீக்கம் செய்யப்பட்டதாக...

யாழில் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு சொக்கலேட் விற்பனை செய்தவருக்கு கிடைத்த தண்டனை….

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு சொக்லேட்கள் மற்றும் பிஸ்கட் என்பவற்றை விற்பனை செய்தவரிடம் ஒரு இலட்ச ரூபாய் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்,...

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அரிசியை வழங்க மறுத்த கிராம அதிகாரி மீது கடும் தாக்குதல்…..

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அரிசியை விநியோகிக்க மறுத்த பெண் கிராம அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கு...

More like this