செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைஇன்றைய வானிலை தொடர்பான அறிவித்தல் .......

இன்றைய வானிலை தொடர்பான அறிவித்தல் …….

Published on

spot_img
spot_img

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.

இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில்,

மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

காலி தொடக்கம் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரப் பிராந்தியங்களில் காலை வேளையிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்.

பொத்துவில் தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 ‐ 30 கிலோமீற்றர் வேகத்தில் காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் தென்கிழக்குத் திசையில் இருந்தும் நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களில் மாறுபட்ட திசைகளில் இருந்தும் காற்று வீசும்.

Latest articles

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகொலை

குருநாகல்-மீரிகம - மாலதெனிய, நால்ல பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை நபர் ஒருவரால் வீட்டில் வைத்து படுகொலை...

இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து

கேகாலை அவிசாவளை வீதியின் கொட்டபொல பிரதேசத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 26...

மண்சரிவு தொடர்பில் புதிய எச்சரிக்கை

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல மாவட்டங்களில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கடும் மழை,...

இந்தியா – இலங்கை கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு

நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை ஆரம்பிக்கும் திகதி மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக குறித்த கப்பல்...

More like this