செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஉலகம்துருக்கி-சிரியா நில நடுக்கம் பலி எண்ணிக்கை 2,300 ஆக உயர்வு!

துருக்கி-சிரியா நில நடுக்கம் பலி எண்ணிக்கை 2,300 ஆக உயர்வு!

Published on

spot_img
spot_img

துருக்கி- சிரியா எல்லையில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கிலோமீட்டர் (14.2 மைல்) தொலைவில் 24.1 கிலோமீட்டர் (14.9 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் தாக்கியது. மேலும் 100 ஆண்டுகளுக்கு பிறஜு இப்பகுதியைத் தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இதுவாகும். ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் துருக்கி, சிரியாவின் எல்லை நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கின. இந்த நிலநடுக்கம் இஸ்ரேல், லெபனான் போன்ற அண்டை நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது. கடுமையான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. அதிகாலை என்பதால் வீடுகளில் அனைவரும் உறங்கிக்கொண்டிருந்தபோது நிலநடுக்கம் ஏற்பட்டு கட்டிடங்கள் இடிந்து அதன் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிக்கொண்டனர். இந்த நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை மீட்க துருக்கி – சிரியாவின் மீட்புக்குழுவினர் களமிறக்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 2300க்கும் மேற்பட்டவர்கள் பேர் உயிரிழந்துள்ளனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்து உள்ளனர்.துருக்கியில் குறைந்தது 912 பேர்; சிரியாவின் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் குறைந்தது 350 க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளனர் அவர்களை மீட்கவும் மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Latest articles

தொல்பொருள் திணைக்களத்தில் ஊழியர் பற்றாக்குறை…..

ஊழியர் பற்றாக்குறையால் தொல்பொருள் திணைக்களம் தற்போது பெரும் சிரமங்களை சந்தித்து வருவதாக தொல்லியல் துறை இயக்குநர் பேராசிரியர் துசித...

ஜூன் மாதம் முதல் மின் கட்டணத்தில் திருத்தம்…..

ஜூன் மாதம் முதல் மீண்டும் மின் கட்டணத்தை திருத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் சுலக்க்ஷா...

இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் கொலை…..

இசை நிகழ்ச்சியொன்றில் இரு இளைஞர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் அதிகரித்து கொலையில் முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பழம் வெட்டும் கத்தியால் இளைஞர்...

பிரபல டைட்டானிக் திரைப்பட நடிகர் பெர்னார்ட் ஹில் காலமானார்….

டைட்டானிக் திரைப்படத்தில் நடித்த பிரபல ஹொலிவுட் நடிகர் பெர்னார்ட் ஹில் 79 ஆவது வயதில் உடல்நலக்குறைவால் ஞாயிற்றுக்கிழமை (05)...

More like this