செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeசினிமாஅஜித் நடித்துள்ள ‘துணிவு’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. இதையடுத்து இயக்குனர் விக்னேஷ்...

அஜித் நடித்துள்ள ‘துணிவு’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. இதையடுத்து இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் ‘ஏகே63’ படத்தில் நடிக்கவுள்ளார்.

Published on

spot_img
spot_img

அஜித் நடித்துள்ள ‘துணிவு’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. இதையடுத்து இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் ‘ஏகே63’ படத்தில் நடிக்கவுள்ளார். எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான ‘துணிவு’ திரைப்படம் கடந்த 11-ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே62-வது படத்தில் அஜித் இணைய உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஏகே 62 படத்தில் நடிகர்கள் அரவிந்த சாமி மற்றும் சந்தானம் நடிக்கவுள்ளதாகவும் இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியானது. இன்னும் ஏகே 62 படப்பிடிப்பே தொடங்கப்படாத நிலையில், ஏகே 63 படம் குறித்த தகவல் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. அதன்படி, ஏகே 63 படத்தை இயக்குனர் அட்லீ இயக்கவுள்ளதாகவும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் சிறுத்தை சிவா, விஷ்ணு வர்தன் மற்றும் புஷ்பா பட இயக்குனர் சுகுமார் ஆகியோரின் பெயர்களும் அடிபடுகிறது. இவ்வாறு மாறிமாறி இயக்குனர் பெயர்கள் வலம் வந்தாலும் ஏகே 63 படத்தை இயக்க அட்லீக்கே அதிக வாய்ப்புகள் இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அட்லீ தற்போது நடிகர் ஷாருக்கான் நடிப்பில் ‘ஜவான்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படம் விரைவில் திரைக்குவரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest articles

மண்சரிவு தொடர்பில் புதிய எச்சரிக்கை

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல மாவட்டங்களில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கடும் மழை,...

இந்தியா – இலங்கை கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு

நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை ஆரம்பிக்கும் திகதி மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக குறித்த கப்பல்...

இன்றைய நாள் ராசி பலன்கள்

குரோதி வருடம் வைகாசி மாதம் 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 19.05.2024 மேஷம் : குடும்ப விஷயங்களை கவனகமாக கையாளவும்....

பல்கலைக்கழக மாணவிக்கு ரயிலில் தொல்லை கொடுத்த இளைஞர்கள் கைது…..

பல்கலைக்கழக மாணவிக்கு தொல்லை கொடுத்த 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஹட்டன் ரயில் நிலையத்தில் வைத்து அவர்கள் இவ்வாறு கைது...

More like this