செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஉலகம்30 ஆண்டுகளாக 10,000 பெண்கள் குளியல் காட்சிகளை இரகசியமாக படம் பிடித்த கும்பல்!

30 ஆண்டுகளாக 10,000 பெண்கள் குளியல் காட்சிகளை இரகசியமாக படம் பிடித்த கும்பல்!

Published on

spot_img
spot_img

ஜப்பான் நாட்டு பொதுமக்களையும் தாண்டி இந்த வெந்நீர் நீரூற்றுகளுக்கு ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் தினசரி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். டோக்கியோ பூகோளத்தில் வடக்கு பக்கத்தில் அமைந்துள்ள ஜப்பான் நாடு அதிக குளிர்ச்சியாக நாடுகளில் ஒன்றாகும். 12.5 கோடி மக்கள் தொகை கொண்ட ஜப்பானின் சராசரி ஆண்டு வெப்பம் 10.82 என்ற அளவிலேயே இருந்துவருகிறது. இதனால் அங்கு பொதுமக்கள் அதிகமாக வெந்நீர் பயன்படுத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். மேலும் அரசு சார்பில் அங்கு முக்கிய இடங்களில் ஹாட் ஸ்பிரிங்ஸ் எனப்படும் வெந்நீர் நீரூற்றுகள் அமைக்கப்பட்டுள்ளன. நிலத்தடியே இருக்கும் எரிமலை செயல்பாட்டால் இந்த வெந்நீரூற்றுகள் உருவாகிறது. ஜப்பான் நாட்டு பொதுமக்களையும் தாண்டி இந்த வெந்நீர் நீரூற்றுகளுக்கு ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் தினசரி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாக இந்த வெந்நீர் நீரூற்றுகள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் அவை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில், வெந்நீர் ஊற்றுகளில் குளிக்கும் பெண்களை சிலர் ரகசியமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்படி போலீசா நடத்திய சோதனையில், பெண்கள் குளிக்கும் காட்சிகளை புகைப்படம் எடுத்தது தொடர்பாக டாக்டர் ஒருவர் உட்பட 17 பேரை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் கைப்பற்றப்பட்ட பொருள்களை சோதனையிட்டதில் 10,000 பேரின் ஆபாசமான புகைப்படங்கள், மற்றும் வீடியோக்கள் இருந்தது கண்டறியபட்டது.கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் மூத்த நிறுவன நிர்வாகிகள், உள்ளூர் அரசாங்க அதிகாரிகள் மற்றும் டோக்கியோ டாக்டர் ஆகியோர் அடங்குவர். 50 வயதான டாக்டர் கரின் சைட்டோ, தனது 20 வயதிலிருந்தே பெண்கள் வெந்நீர் ஊற்றுகளில் குளிப்பதை சீக்ரெட்டாக படம் பிடித்து வருகிறார்.கைது செய்யப்பட்ட மற்ற குற்றவாளிகள் சைட்டோவிடமிருந்து தான் பெண்களைப் படம்பிடிக்கும் கீழ்த்தரமான நுட்பங்களைக் கற்றுள்ளனர். மேலும், நாடு முழுவதும் உள்ள 100க்கும் மேற்பட்ட வெந்நீர் ஊற்றுகளில் குளித்த பெண்களில் புகைப்படங்கள் அவர்களிடம் இருப்பதாகவும் அதை பல்வேறு இணையதளங்களுக்கு விற்பனை செய்த தகவலும் வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் வேறு யாரும் சம்மந்தப்பட்டுள்ளனரா என்பது குறித்தும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.

Latest articles

ஏறாவூரில் மர்மமான முறையில் உயிரிழந்த ஆண் ஒருவரின் சடலம் மீட்பு…..

ஏறாவூர் செங்கலடி பகுதியில் கைவிடப்பட்ட வீடொன்றின் பின்னால் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் அதே பகுதியைச்...

வாத்துவை – மொல்லிகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்….

வாத்துவை - மொல்லிகொட பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உணவகம் ஒன்றிற்கு முன்பாக இந்த துப்பாக்கிச்...

யாழில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 06 பேர் கைது….

யாழ். வடமராட்சி கிழக்கு சாலை கடற்பகுதியில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் நேற்று மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக ஒளிபாய்ச்சி மீன்பிடியில்...

வவுனியாவில் வழிபாட்டுத் தளங்களில் ஒலிபெருக்கி பாவனையை கட்டுப்படுத்த கோரிக்கை…

வவுனியா மாவட்டத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சைக்காக கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கிகள் சமய...

More like this