செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeசினிமா2024 பொங்கலுக்கு மோத இருக்கும் 6 படங்கள், தனுஷுடன் நேரடியாகமோதும் முன்னாள் மனைவி

2024 பொங்கலுக்கு மோத இருக்கும் 6 படங்கள், தனுஷுடன் நேரடியாகமோதும் முன்னாள் மனைவி

Published on

spot_img
spot_img

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் மற்றும் தீபாவளியின் போதுவாக வெளியாகும் படங்களுக்கு ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருப்பார்கள். இந்த வருடம் 2023இல் அஜீத்தும் விஜய்யும் ஒரே நாளில் திரையிட்டு தங்கள் ரசிகர்களுக்கு உண்மையான பொங்கல் விருந்தளித்தனர். அடுத்த வருடம் அப்படியொரு வாய்ப்பு இல்லை என்றாலும் பொங்கல் நாளில் தமிழ் சினிமாவின் சில முக்கிய ஹீரோக்களின் படங்கள் வருகின்றது. 2024 பொங்கலுக்கு வெளியாகும் ஆறு படங்களைப் பார்ப்போம்.

லால் சலாம் : ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பல வருடங்களுக்கு பிறகு லால் சலாம் படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடித்துள்ளனர். இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு வேடத்தில் நடிக்கிறார். இப்படம் ஜனவரி 12ஆம் தேதி வெளியாகிறது.

கேப்டன் மில்லர்: தனுஷ் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கும் படம் கேப்டன் மில்லர். இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். இந்த படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் இது சரித்திர கதையை மையமாக கொண்ட படம் என்றும் கூறப்படுகிறது. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

அயலான்: நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் அயலான் படத்தையும் இயக்குகிறார். நடிகர் சிவகார்த்திகேயன் முதன்முறையாக இதுபோன்ற அறிவியல் கதையில் நடித்துள்ளார். வேற்றுகிரகவாசியை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்தில் நடிகர் சித்தார்த் வேற்றுகிரகவாசியின் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்துள்ளார்.

அரண்மனை 4: இயக்குனர் சுந்தர் சி தனது பேய் கதை தொடரை அரண்மனையாக தொடர்கிறார். அந்த வகையில் சுந்தர் சி, தமன்னா, ராசி கண்ணா நடித்துள்ள படம் அரண்மனை 4. இந்தப் படமும் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

குண்டூர் கரம்: தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிக்கும் படம் குண்டூர் கரம். இந்தப் படத்தில் மீனாட்சி சவுத்ரி, ரம்யா கிருஷ்ணன், ஜெகபதி பாபு ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

மெர்ரி கிறிஸ்துமஸ்: விஜய் சேதுபதி மற்றும் கத்ரீனா கைஃப் நடித்துள்ள மெர்ரி கிறிஸ்துமஸ். இந்த படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை அறிவிக்கப்பட்டு பின்னர் தள்ளிப்போனது. தற்போது பொங்கலை ஒட்டி அடுத்த ஆண்டு ஜனவரி 12ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது.

Latest articles

பல்கலைக்கழக மாணவிக்கு ரயிலில் தொல்லை கொடுத்த இளைஞர்கள் கைது…..

பல்கலைக்கழக மாணவிக்கு தொல்லை கொடுத்த 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஹட்டன் ரயில் நிலையத்தில் வைத்து அவர்கள் இவ்வாறு கைது...

தாழ்நிலப் பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக ஆறுகளை அண்டிய தாழ் நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாக...

இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி….

கெக்கிராவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில்...

போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வர்த்தகர் ஒருவர் கைது….

சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட 60 இலட்சம் ரூபா பெறுமதியான “குஷ்” போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து...

More like this