செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஉலகம்முதல் தடவையாக ட்ரம்பை வென்றார் நிக்கி ஹாலே...

முதல் தடவையாக ட்ரம்பை வென்றார் நிக்கி ஹாலே…

Published on

spot_img
spot_img

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளரைத் தெரிவுசெய்வதற்காக வொஷிங்டன் டிசி நகரில் நடந்த உட்கட்சித் தேர்தலில் நிக்கி ஹாலே வெற்றியீட்டியுள்ளார்.

குடியரசுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளருக்கான உட்கட்சித் தேர்தல் வரலாற்றில் பெண்ணொருவர், பிராந்திய தேர்தலொன்றில் வெற்றியீட்டியமை இதுவே முதல் தடவையாகும்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை வொஷிங்டன் டி.சி. நகரில் நடைபெற்ற தேர்தலில் நிக்கி ஹாலே 63 சதவீத வாக்குகளைப் பெற்றார். இதன் மூலம் நகரில் நிக்கி ஹாலே 19 பிரதிநிதிகளின் ஆதரவைப் பெறுவார்.

முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 33.3 சதவீத வாக்குகளைப் பெற்றார். அவருக்கு வொஷிங்டன் டிசியிலிருந்து பிரதிநிதிகள் எவரும் கிடைக்கவில்லை.

டொனால்ட் ட்ரம்ப், நிக்கி ஹாலே ஆகிய இருவர் மாத்திரமே தற்போது குடியரசுக் கட்சி வேட்பாளருக்கான போட்டியில் நீடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

குடியரசுக் கட்சியில் அமெரிக்கா முழுவதும் 2429 பிரதிநிதிகள் உள்ளனர். ஜனாதிபதி வேட்பாளராகுவதற்கு குறைந்தபட்சம் 1215 பிரதிநிதிகளின் ஆதரவு தேவை.

டொனால்ட் ட்ரம்ப் இதுவரை 247 பிரதிநிதிகளையும் நிக்கி ஹாலே பிரதிநிதிகளையும் பெற்றுள்ளனர்.

நாளை செவ்வாய்க்கிழமை 15 மாநிலங்களில் குடியரசுக் கட்சி வேட்பாளருக்கான உட்கட்சித் தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest articles

புத்தளம் மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை….

புத்தளம் மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடமேல் ஆளுநர் அலுவலம் தெரிவித்துள்ளது. புத்தளம் மாவட்டத்தில்...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ விபத்து….

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ பரவியுள்ளது.கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்த அதிவேக நெடுஞ்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில்...

மந்திரவாதியிடம் சென்ற பெண் படுகொலை

பாதுகாப்பிற்காக அணிந்திருந்த தயத்தினால் எந்தப் பலனும் இல்லை எனத் திட்டிய பெண்ணொருவர், மந்திரவாதியால் கொல்லப்பட்டுள்ளார். அந்த மந்திரவாதியின் ஆலோசனைக்கு அமைய...

கொழும்பில் வெள்ள அபாயப் பகுதிகளாக 22 பிரதேசங்கள் அடையாளம்

கொழும்பு மாவட்டத்தில் 22 பகுதிகள் வெள்ள அபாய பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. இந்த பகுதிகளில்...

More like this