செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைபேருந்துக் காப்பாளரின் நேர்மைக்குப் பலரும் பாராட்டு.....

பேருந்துக் காப்பாளரின் நேர்மைக்குப் பலரும் பாராட்டு…..

Published on

spot_img
spot_img

வெளிநாட்டவர் ஒருவரின் பெருந்தொகை பணமடங்கிய பையை கையளித்த பருத்தித்துறை பேருந்துக் காப்பாளரின் செயற்பாட்டினை பலரும் பாராட்டி வருகின்றனர்.

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை சாலையில் காப்பாளராக கடமையாற்றும் டீ.பாலமயூரன் என்பவர் கொழும்பிலிருந்து பருத்தித்துறை நோக்கி சேவைக் கடமையில் நேற்று ஈடுபட்டிருந்தார்.

குறித்த பேருந்தில் வெளிநாட்டவர் ஒருவரினால் தவறவிடப்பட்ட பாஸ்போர்ட், 120,840 இலங்கை ரூபாய் பணம் மற்றும் 300 யூரோ பணத்தினை நேற்றையதினம் பருத்தித்துறை சாலையில் ஒப்படைத்துள்ளார்.

அண்மை நாட்களில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அதிக விலையில் உணவுகள் விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் செய்திகள் வெளியாகி நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பேருந்து காப்பாளரின் குறித்த செயல் பலராலும் பாராட்டப்படுகின்றது.

அத்துடன் இவர் 2021ம் ஆண்டு மற்றுமொரு பயணி ஒருவரால் தவற விடப்பட்ட இரண்டு இலட்சத்து ஐம்பது ஓராயிரம் ரூபா பணம் மற்றும் எழுபதாயிரம் ரூபாய் பெறுமதியான போன் ஒன்றினையும் சாலை நிர்வாகத்திடம் ஒப்படைத்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Latest articles

புத்தளம் மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை….

புத்தளம் மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடமேல் ஆளுநர் அலுவலம் தெரிவித்துள்ளது. புத்தளம் மாவட்டத்தில்...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ விபத்து….

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ பரவியுள்ளது.கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்த அதிவேக நெடுஞ்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில்...

மந்திரவாதியிடம் சென்ற பெண் படுகொலை

பாதுகாப்பிற்காக அணிந்திருந்த தயத்தினால் எந்தப் பலனும் இல்லை எனத் திட்டிய பெண்ணொருவர், மந்திரவாதியால் கொல்லப்பட்டுள்ளார். அந்த மந்திரவாதியின் ஆலோசனைக்கு அமைய...

கொழும்பில் வெள்ள அபாயப் பகுதிகளாக 22 பிரதேசங்கள் அடையாளம்

கொழும்பு மாவட்டத்தில் 22 பகுதிகள் வெள்ள அபாய பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. இந்த பகுதிகளில்...

More like this