செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைநத்தார் பரிசு கிடைத்ததாக கூறி பண மோசடியில் ஈடுபட்டவர் கைது.....

நத்தார் பரிசு கிடைத்ததாக கூறி பண மோசடியில் ஈடுபட்டவர் கைது…..

Published on

spot_img
spot_img

பெண் ஒருவரிடம் நத்தார் பரிசு கிடைத்ததாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட சந்தேகத்தில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் மொரட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலி பிரதேசத்தில் உள்ள பெண்ணொருவருக்கு வெளிநாட்டிலிருந்து நத்தார் பண பரிசு கிடைத்ததாகக் கூறி அவரிடம் இருந்து இரு தடவைகளில் 30,000, மற்றும் 56,000 ரூபா பணத்தை சந்தேக நபர் பெற்றுக்கொண்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளின் போது, கடந்த பெப்ரவரி மாதம் வெளிநாட்டிலிருந்து நத்தார் பரிசு வந்ததாக அந்த பெண்ணிற்குச் சந்தேக நபர் அழைப்பு விடுத்துள்ளார் .

மீண்டும் சில நாட்களுக்கு அந்த பெண்ணுக்கு அழைப்பு விடுத்து பரிசாகக் கிடைத்துள்ள பணம் கருப்பு பணம் என கூறியுள்ளார்.

எனவே, கொடுத்துள்ள வங்கிக் கணக்கில் மேற்குறிப்பிட்ட பணத்தை வைப்பிலிட வேண்டும் . இல்லையெனில் ‘கறுப்புப் பணம் வைத்திருந்ததற்காகச் சிறை செல்ல வேண்டியிருக்கும்’ என சந்தேக நபர் குறிப்பிடப்பட்டுள்ளார் .

இதனையடுத்து இந்த பெண் பயந்து சந்தேக நபர் வழங்கிய வங்கிக் கணக்கிற்கு 30,000 மற்றும் 56,000 ரூபா பணத்தை வைப்பிலிட்டுள்ளார் .

வைப்பிலிட்ட பிறகு பரிசி பொருள் தொடர்பில் எந்த தகவலும் கிடைக்காததால் இந்த பெண் கடந்த பெப்ரவரி மாதம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியுள்ளார் .

முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸாரின் நீண்ட விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Latest articles

இராணுவ அதிகாரிகள் 1509 பேருக்கு தரம் உயர்வு

15வது யுத்த வெற்றி தின கொண்டாட்டத்துடன் இணைந்து இலங்கை இராணுவ அதிகாரிகள் பலருக்கு தரம் உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கு...

13 வயது பாடசாலை மாணவனை தாக்கிய பொலிஸார்…..

குருநாகலில் 13 வயது பாடசாலை மாணவன் ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவினால் தாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். அத்துடன் தாக்குதலுக்குள்ளான மாணவன் அண்மையில்,...

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகொலை

குருநாகல்-மீரிகம - மாலதெனிய, நால்ல பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை நபர் ஒருவரால் வீட்டில் வைத்து படுகொலை...

இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து

கேகாலை அவிசாவளை வீதியின் கொட்டபொல பிரதேசத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 26...

More like this