செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைசாம்பியனாக முடிசூடியது யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி

சாம்பியனாக முடிசூடியது யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி

Published on

spot_img
spot_img

யாழ்ப்பாண பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான அலகின் இருபத்தைந்தாவது ஆண்டு (வெள்ளி விழா ) நிறைவை முன்னிட்டு அழைக்கப்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான (19 வயது ) காற்பந்தாட்டப்போட்டியின் இறுதியாட்டம் 04/12/2023 திங்கட்கிழமை 03:00 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இவ் இறுதியாட்டத்தில் சென் பற்றிக்ஸ் கல்லூரியை எதிர்த்து சென் ஹென்றீஸ் கல்லூரி மோதியது. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் குறிப்பிட்ட நேரத்தில் கோல்கள் பெறும் சந்தர்பங்களை தவறவிட ஆட்டம் கோல்கள் இன்றி சமநிலையில் முடிந்தது.

பின்னர் வெற்றி தோல்வியை தீர்மானிப்பதற்காக வழங்கப்பட்ட சமநிலை தவிர்ப்பு உதையில் (Penalty) சென் பற்றிக்ஸ் கல்லூரி 04 : 02 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான அலகின் வெள்ளி விழா சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.

இத்தொடரின் முதலாவது லீக் போட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியை 02 : 01 என்ற கோல் கணக்கிலும் இரண்டாவது போட்டியில் மானிப்பாய் இந்துக் கல்லூரியை 01 : 00 என்ற கோல் கணக்கிலும் காலிறுதி ஆட்டத்தில் வேலணை மத்திய கல்லூரியை 01: 00 என்ற கோல் கணக்கிலும், அரையிறுதி ஆட்டத்தில் தேவரையாளி இந்துக் கல்லூரியை 03 : 00 என்ற கோல் அடிப்படையிலும் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Latest articles

பல்கலைக்கழக மாணவிக்கு ரயிலில் தொல்லை கொடுத்த இளைஞர்கள் கைது…..

பல்கலைக்கழக மாணவிக்கு தொல்லை கொடுத்த 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஹட்டன் ரயில் நிலையத்தில் வைத்து அவர்கள் இவ்வாறு கைது...

தாழ்நிலப் பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக ஆறுகளை அண்டிய தாழ் நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாக...

இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி….

கெக்கிராவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில்...

போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வர்த்தகர் ஒருவர் கைது….

சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட 60 இலட்சம் ரூபா பெறுமதியான “குஷ்” போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து...

More like this