செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைகை , கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்....

கை , கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்….

Published on

spot_img
spot_img

வெலிகம பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று திங்கட்கிழமை (06) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் 78 வயதுடைய பெண் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார் .

உயிரிழந்த பெண் தங்கியிருந்த வீட்டுக்குள் இனந்தெரியாத சந்தேக நபர்கள் சிலர் புகுந்து வீட்டிலிருந்த பெறுமதியான பொருட்களைக் கொள்ளையிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

பின்னர், வீட்டில் வைத்து பெண்ணின் கை , கால்கள் கட்டப்பட்ட நிலையில் இந்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது .

உயிரிழந்த பெண் அவருடைய சகோதரி மற்றும் கணவருடன் வசித்து வருவதுடன் இருவரும் வெளியில் சென்ற போதே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மாத்தறை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest articles

கொழும்பில் வெள்ள அபாயப் பகுதிகளாக 22 பிரதேசங்கள் அடையாளம்

கொழும்பு மாவட்டத்தில் 22 பகுதிகள் வெள்ள அபாய பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. இந்த பகுதிகளில்...

இராணுவ அதிகாரிகள் 1509 பேருக்கு தரம் உயர்வு

15வது யுத்த வெற்றி தின கொண்டாட்டத்துடன் இணைந்து இலங்கை இராணுவ அதிகாரிகள் பலருக்கு தரம் உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கு...

13 வயது பாடசாலை மாணவனை தாக்கிய பொலிஸார்…..

குருநாகலில் 13 வயது பாடசாலை மாணவன் ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவினால் தாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். அத்துடன் தாக்குதலுக்குள்ளான மாணவன் அண்மையில்,...

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகொலை

குருநாகல்-மீரிகம - மாலதெனிய, நால்ல பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை நபர் ஒருவரால் வீட்டில் வைத்து படுகொலை...

More like this