செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇந்தியாகேப்டன் சமாதியில் எற்பட்டமுரண்பாடு..... விரட்டியடித்த விஜயகாந்த் தொண்டர்கள்

கேப்டன் சமாதியில் எற்பட்டமுரண்பாடு….. விரட்டியடித்த விஜயகாந்த் தொண்டர்கள்

Published on

spot_img
spot_img

கேப்டன் விஜயகாந்தின் மறைவு என்பது தமிழக மக்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு. அவர் வாழும் வரை மக்களுக்காக மட்டுமே வாழ்ந்தார் என்பதால்தான் அவருடைய சமாதியை பொதுமக்கள் எப்போது வந்து வேண்டுமானாலும் பார்த்துவிட்டு அஞ்சலி செலுத்துவதற்கு ஏற்ற மாதிரி வசதிகள் செய்து வைத்திருக்கிறார்கள். ஆனால் நண்டு சிண்டு எல்லாம் அங்கு வந்து செய்யும் அலப்பறை ரொம்பவே வருத்தத்திற்குரிய விஷயமாக இருக்கிறது.

விஜயகாந்த் இருக்கும் வரை அவரைப் பற்றி பேசாதவர்கள், அவரை நேரில் சென்று பார்க்காதவர்கள் எல்லாம் இறந்த பிறகு நேரில் வந்து அஞ்சலி செலுத்துகிறார்கள். உண்மையான பாசத்தோடு அவர்கள் அப்படி செய்தாலும், சிலருடைய நடவடிக்கைகளை பார்க்கும் பொழுது விஜயகாந்தின் மரணத்தை வைத்து தங்களை நல்லவர் போல் மக்களிடையே காட்டிக் கொள்ள முயற்சிப்பது போல் தான் தெரிகிறது.

விஜயகாந்த்தால் வளர்ச்சி பெற்ற நிறைய பிரபலங்கள் அவருடைய சமாதிக்கு வந்தபோது மக்களிடையே வெறுப்பை தான் சம்பாதித்தார்கள். இதற்கு காரணம் அவர் உயிரோடு இருக்கும்பொழுது அவரை யாருமே கண்டு கொள்ளவில்லை, அவருக்கு அரசியலில் நிறைய பிரச்சனைகள் வந்து அவரை ஒரு கோமாளி போல் சித்தரித்த போது அவருக்கு ஆதரவாக யாருமே நிற்கவில்லை, இதுதான் மக்களின் நிஜமான கோபத்திற்கு காரணம்.

சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர் பூர்ணிமா கூட கேப்டன் சமாதிக்கு சென்றார். அவர் அங்கு சென்றதைக் கூட மக்கள் பெரிய அளவில் விரும்பாமல் நெகடிவ் விமர்சனங்களை பதிவிட்டு வந்தார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் பைக் சாகச வீரர் மற்றும் புதுமுக நடிகரான டிடிஎஃப் வாசன் கேப்டன் சமாதிக்கு சென்று இருக்கிறார்.

விரட்டியடித்த விஜயகாந்த் தொண்டர்கள்
பைக் ரேஸ் மூலம் யூடியூபில் பிரபலமான இவர் 2கே கிட்ஸ்கள் இடையே பெரிய ஹீரோ போல் இருக்கிறார். சமீபத்தில் பைக் வீலிங் செய்யும் பொழுது விபத்தில் சிக்கிக்கொண்ட இவரை சென்னை உயர் நீதிமன்றம் கண்டித்தது மட்டுமல்லாமல், அவருடைய லைசன்சை ரத்து செய்து இருக்கிறார்கள். இளம் தலைமுறைக்கு இவர் ஒரு தவறான எடுத்துக்காட்டாக இருக்கிறார் என உயர் நீதிமன்றமே சுட்டிக் காட்டி இருந்தது.

வாசன் கேப்டனின் சமாதிக்கு வந்ததோடு மட்டுமில்லாமல் செல்பி எடுக்கிறேன் என்ற பெயரில் ஓவர் அலப்பறை காட்டி இருந்திருக்கிறார். இது அங்கிருந்த விஜயகாந்த் ரசிகர்களுக்கு ரொம்பவே கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு கட்டத்தில் நிதானத்தை இழந்த அவர்கள், வாசனை அங்கிருந்து விரட்டி அடித்த சம்பவம் மிகப்பெரிய அளவில் இப்போது பேசப்பட்டு வருகிறது.

Latest articles

இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து

கேகாலை அவிசாவளை வீதியின் கொட்டபொல பிரதேசத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 26...

மண்சரிவு தொடர்பில் புதிய எச்சரிக்கை

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல மாவட்டங்களில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கடும் மழை,...

இந்தியா – இலங்கை கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு

நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை ஆரம்பிக்கும் திகதி மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக குறித்த கப்பல்...

இன்றைய நாள் ராசி பலன்கள்

குரோதி வருடம் வைகாசி மாதம் 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 19.05.2024 மேஷம் : குடும்ப விஷயங்களை கவனகமாக கையாளவும்....

More like this

இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து

கேகாலை அவிசாவளை வீதியின் கொட்டபொல பிரதேசத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 26...

மண்சரிவு தொடர்பில் புதிய எச்சரிக்கை

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல மாவட்டங்களில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கடும் மழை,...

இந்தியா – இலங்கை கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு

நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை ஆரம்பிக்கும் திகதி மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக குறித்த கப்பல்...