செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஉலகம்குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளார்....

குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளார்….

Published on

spot_img
spot_img

சம்பவத்தில் ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.

கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நிலையில், புனித மத நூலை எரித்தமைக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன. கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது.

அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது.

இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். எனினும் அவரது கோரிக்கை குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகின்றது.

வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

Latest articles

அமெரிக்க விவசாய துணைச் செயலாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பு….

அமெரிக்க விவசாயத் திணைக்களத்தின் (USDA) வர்த்தக மற்றும் வெளிநாட்டு விவசாய விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் அலெக்சிஸ் டெய்லர் (Alexis...

பிரித்தானியாவில் இருந்து சீனாவுக்காக உளவுப் பார்த்த இருவர் கைது….

பிரித்தானியாவில் இருந்து சீனாவுக்காக உளவுப் பார்த்த அந்நாட்டின் நாடாளுமன்றத்தின் முன்னாள் ஆய்வாளர் உட்பட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பிரித்தானிய...

டெல்லியிடம் போராடி தோற்ற மும்பை அணி…

17 வது பருவகால இந்தியன் பிறீமியர் லீக் தொடரின் 43 வது போட்டி சற்று முன் நிறைவுக்கு வந்தது....

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையான கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்……

தமிழ்நாடு நாகப்பட்டினத்திலிருந்து யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வரையான கப்பல் சேவைகள் எதிர்வரும் 13ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கப்பல் சேவைக்காக...

More like this