செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைகடந்த 24 மணி நேரத்தில் நடந்த வீதி விபத்துக்களில் இரு பெண்கள் உட்பட நால்வர் உயிரிழப்பு.....

கடந்த 24 மணி நேரத்தில் நடந்த வீதி விபத்துக்களில் இரு பெண்கள் உட்பட நால்வர் உயிரிழப்பு…..

Published on

spot_img
spot_img

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் நடந்த வீதி விபத்துகளில் இரண்டு பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

நிட்டம்புவ, வலப்பனை, கிளிநொச்சி மற்றும் மத்தேகொட ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் நேற்று (06) தெரிவித்தனர்.

வலப்பனை, நில்தண்டாஹின்ன, கலகன்னவத்தை, குறுகிய வளைவு மற்றும் செங்குத்தான வீதியில் மாளிகதென்ன கல்பொத்தவில் இடம்பெற்ற விபத்தில் 31 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

பெக்ஹோ இயந்திரம் ஒன்று அதன் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி சுமார் 09 மீற்றர் தூரத்தில் உள்ள பள்ளத்தில் வீழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதேவேளை கண்டி-யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் பரந்தன் பகுதியில் வீதியின் இடதுபுறத்தில் பயணித்த பஸ் ஒன்று பாதசாரிகள் மீது மோதியதில் விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

வவுனியா நெலும்குளம் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, மத்தேகொட, கிரிகம்பமுனுவ மற்றும் சல்கஸ் சந்திக்கு இடையிலான பிரதான வீதியில் மத்தேகொட நகரப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 69 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வீதியில் நடந்து சென்ற பாதசாரி பெண் மீது கார் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, கொழும்பில் இருந்து கண்டி செல்லும் பிரதான வீதியில் நிட்டம்புவ நகரில் பாதசாரி கடவையை கடந்த பெண் மீது வேன் மோதியதில் விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த பெண் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

வெலிகடமுல்ல, அத்தனகல்ல பிரதேசத்தில் வசிக்கும் 70 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Latest articles

இராணுவ அதிகாரிகள் 1509 பேருக்கு தரம் உயர்வு

15வது யுத்த வெற்றி தின கொண்டாட்டத்துடன் இணைந்து இலங்கை இராணுவ அதிகாரிகள் பலருக்கு தரம் உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கு...

13 வயது பாடசாலை மாணவனை தாக்கிய பொலிஸார்…..

குருநாகலில் 13 வயது பாடசாலை மாணவன் ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவினால் தாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். அத்துடன் தாக்குதலுக்குள்ளான மாணவன் அண்மையில்,...

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகொலை

குருநாகல்-மீரிகம - மாலதெனிய, நால்ல பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை நபர் ஒருவரால் வீட்டில் வைத்து படுகொலை...

இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து

கேகாலை அவிசாவளை வீதியின் கொட்டபொல பிரதேசத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 26...

More like this