செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeசினிமாஏன் இந்த தமிழ் சினிமா உலகம் இந்த விஜயகாந்தை இப்படி கொண்டாடுகிறது...

ஏன் இந்த தமிழ் சினிமா உலகம் இந்த விஜயகாந்தை இப்படி கொண்டாடுகிறது…

Published on

spot_img
spot_img
நடிகர் ரஜினிகாந்த் கமலஹாசன் போன்ற நடிகர்களுக்கு நூறாவது படம் வெற்றி பெறாது என்ற சென்டிமென்ட் தொடர்ந்த போது தனது நூறாவது படமாக கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தை மாபெரும் வெற்றி படமாக்கி மிரட்டியது விஜயகாந்தின் ரசிகர்கள் படை.
திரை உலகில் திரைப்பட கலைஞர்கள் குறித்து பேசும் போது நடிகர் விஜயகாந்த் பேச்சு எப்போது வந்தாலும் விஜயகாந்தை சிலாகித்து சில நிமிடங்கள் பேசி விட்டே கடக்கிறார்கள்..
விஜயகாந்த் தமிழ் சினிமாவில் நிகழ்த்திய அதிசயம் என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
விஜயராஜ் அழகர்சாமியாக மதுரையில் 10வது மட்டுமே படித்த விஜயகாந்த் தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக சாதித்தது ஒரு சரித்திர கதை..
எளிய தோற்றம் கொண்ட கறுப்பு நிறம் கொண்ட மனிதர்கள் சினிமா துறையில் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையை தமிழ் சினிமாவில் உள்ள பலருக்கும் விதைத்ததில் விஜயகாந்த்திற்கு பங்கு உண்டு..
விஜயகாந்தின், தூரத்து இடிமுழக்கம் திரைப்படம் வெற்றிபெறும் வரையில் விஜயகாந்த் எதிர்கொண்ட விமர்சனங்கள் வேறெந்த நடிகருக்கும் கிடைக்காத எதிர்மறை விமர்சனங்கள்..
எல்லா விமர்சனங்களையும் கடந்து வெற்றி பெற்று தன்னுடன் வெற்றிக்காக போராடியவர்கள் அத்தனை பேரையும் தன்னோடு தோளோடு தோளாக தோள் கொடுத்து தூக்கி விட்டது விஜயகாந்தின் மிக …
விஜயகாந்தின் அலுவலகத்தை வாய்ப்புக்காக போராடும் உதவி இயக்குனர்கள் தங்கும் அறையாக மாற்றி கொடுத்திருந்தது 80களில் தமிழ் சினிமாவின் கனவுகளோடு சென்னைக்கு குடியேறும் பலருக்கும் அது தான் தாஜ்மஹால் ஆக தெரிந்த இடம்..
பலமுறை உதவி இயக்குனர்களுடன் கூடவே இரவில் படுத்து உறங்கி காலையில் சூட்டிங் சென்று இருக்கிறார் விஜயகாந்த்…
படப்பிடிப்பு தளத்தில் அனைத்து தரப்பிற்கும் ஒரே உணவு என்பது விஜயகாந்த் தமிழ் சினிமாவில் நிகழ்த்தி அசத்தி காட்டிய சமபந்தி சமத்துவம்..
அதுநாள் வரை நடிகர்களுக்கு ஒரு உணவு, தொழில்நுட்ப கலைஞர்களுக்கு ஒரு உணவு, சாதாரண தொழிலாளர்களுக்கு ஒரு உணவு என்ற நிலையை மாற்றி அனைவருக்கும் ஒரே மாதிரியான சைவ அசைவம் கிடைக்கும் வகையில் விஜயகாந்த் செய்த சமபந்தி என்பது அன்றைய காலத்தில் சினிமா தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நல்ல சாப்பாடு கிடைக்க செய்தது விஜயகாந்தின் நல்ல மனது…
இந்த மனதை தான் கொண்டாடி தீர்க்கிறது தமிழ் சினிமா..
விஜயகாந்த் வீட்டில் வழங்கப்படும் உணவு என்பது விருகம்பாக்கம் பக்கத்தில் வாய்ப்பு தேடி அலையும் உதவி இயக்குனர்கள் பலருக்கும் கிடைத்த வர பிரசாதம் இன்று தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக இருக்கும் இயக்குனர்கள் பலரும் விஜயகாந்த் வீட்டில் உணவு உண்டவர்கள் என்பது விஜயகாந்த் புகழ் தமிழ் சினிமாவில் இன்னும் நிலைத்திருக்கும் முக்கிய காரணம்…
தமிழ் திரை உலகில் திரைப்பட கலைஞர்கள் பேசும் போது நடிகர் விஜயகாந்த் பேச்சு எப்போது வந்தாலும் விஜயகாந்தை சிலாகித்து சில நிமிடங்கள் பேசி விட்டே கடக்கிறார்கள்…
இப்படி பல சாதனைகளை சொல்லி கொண்டே போனாலும் விஜயகாந்தின் மிகப்பெரிய சாதனையாக அனைவரும் தவறாமல் குறிப்பிடுவது நடிகர் சங்கத்தை கடனிலிருந்து மீட்ட கதை..
ஒரு பாகுபலி கதை போல விஜயகாந்தின் இந்த கதையை சொல்ல பல காரணங்கள் இருக்கிறது. நடிகர் சிவாஜி கணேசனால் தொடங்கப்பட்டு சம்பிரதாயத்திற்கு நடத்தப்பட்டு வந்த நடிகர் சங்கம் கடனில் மூழ்கி இடம் திவால் ஆகும் பொழுது ஹபிபுல்லா ரோட்டில் இருக்கும் இவ்வளவு பெரிய இடம் கடனில் முழுகுவதா என களத்தில் இறங்கி சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி நடிகர் சங்க கடனை அடைத்து நடிகர் சங்கத்திற்கு ஓரு பெரும் நிதியை வங்கியில் வைப்பு தொகையாக செய்தது விஜயகாந்தால் மட்டுமே அந்த காலகட்டத்தில் செய்ய முடிந்த சாதனை..
திரை நட்சத்திரங்களில் உச்ச நட்சத்திரங்களாக திகழ்ந்த ரஜினி கமல் உள்ளிட்ட ஒரு பெரும் நடிக நடிகைகள் படையை மலேசியா, சிங்கப்பூர் அழைத்து சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தி அதன் மூலமாக வசூல் செய்த விஜயகாந்தின் சரித்திர சாதனையை தமிழ் சினிமா இருக்கும் வரை பேசிக் கொண்டே இருக்கும் அளவிற்கு நடிகர்களின் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்து விட்டார் விஜயகாந்த்…
இப்படியே இன்னும் மேலும் பல விஷயங்களை தகவல்களை சொல்லி கொண்டே போகலாம்.
by- தமிழ் செய்திகள்

Latest articles

400 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கவுள்ள ஜனாதிபதி

வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 400 பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் வழங்கவுள்ளார். யாழ்ப்பாணம் , தந்தை செல்வா...

அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 23,731 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டுப்பிரிவின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை…..

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளுக்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை விசேட அறிவித்தல்...

லஞ்ச் சீட்டை முற்றாகத் தடை செய்ய நடவடிக்கை….

அடுத்த வருடம் முதல் லஞ்ச் சீட்டை முற்றாகத் தடை செய்ய மத்திய சுற்றாடல் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி...

More like this

400 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கவுள்ள ஜனாதிபதி

வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 400 பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் வழங்கவுள்ளார். யாழ்ப்பாணம் , தந்தை செல்வா...

அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 23,731 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டுப்பிரிவின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை…..

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளுக்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை விசேட அறிவித்தல்...