செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeவிளையாட்டுCricketஇறுதி போடியில் விராட்கோலி விளையாடுவது சந்தேகமா?

இறுதி போடியில் விராட்கோலி விளையாடுவது சந்தேகமா?

Published on

spot_img
spot_img

இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன.

இதில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நேற்று நடைபெற்ற 2-வது அரையிறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. அதில் ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்நிலையில் 19ஆம் தேதி இறுதிப்போட்டி தொடங்குவதற்கு முன்பு இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது. விமானப்படையின் சூர்யகிரண் ஏரோபாட்டிக் குழு 10 நிமிடங்கள் விமான சாகசத்தில் ஈடுபடும் என்றும் இதற்கான ஒத்திகை இன்றும், நாளையும் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டியின் போது பிரதமர் மோடி கலந்து கொள்ள இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களும் உலகக்கோப்பைகளை வென்றவர்களுமான கபில்தேவ், தோனி போன்றோரும் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரையிறுதி போட்டியில் விராட்கோலி காலில் பந்து தாக்கியதால் போடியில் விளையாடுவது சற்று சந்தேகம் அளித்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

Latest articles

இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது…..

இலங்கைக்குச் சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ராகம, கட்டகேவத்த பகுதியில் குற்றப்புலனாவு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட...

பரீட்சைக்கு சென்ற இரு பாடசாலை மாணவிகள் மாயம்….

கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தர பரீட்சைக்குத் தோற்றுவதற்காக பரீட்சை நிலையத்திற்கு சென்ற இரு பாடசாலை மாணவிகள் வீடுகளுக்கு...

அதிகரித்து வரும் தொழுநோயாளர்களின் எண்ணிக்கை….

இந்த ஆண்டில் புதிதாக 264 தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தொழுநோய் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. அவர்களில் 24 பேர் 15 வயதுக்குட்பட்ட...

வெசாக் அலங்காரங்களுக்கு பிளாஸ்டிக் பயன்படுத்த தடை

வெசாக் பண்டிகையின் போது செய்யப்படும் பல்வேறு அலங்காரங்களுக்கு பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக்கை பயன்படுத்த வேண்டாம் என மத்திய சுற்றாடல்...

More like this