செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைஇன்றைய வானிலை தொடர்பான அறிவித்தல் ........

இன்றைய வானிலை தொடர்பான அறிவித்தல் ……..

Published on

spot_img
spot_img

வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல்,மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் மொனராகலை மாவட்டத்திலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.

இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில்,

மத்திய , சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் அனுராதபுரம், வவுனியா, மன்னார், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி,மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களின் சில இடங்களிலும் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்.

புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 ‐ 30 கிலோமீற்றர் வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும்.

Latest articles

பிரைட் ரைஸ், கொத்து உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகள் குறைப்பு….

உணவு பொருட்கள் சில்வற்றின் விலைகளை குறைக்க அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி கொத்து மற்றும் ப்ரைட்...

இலங்கை – இந்திய கப்பல் சேவை மீள ஆரம்பம்…..

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடாத்தப்பட்டு இடைநிறுத்தப்பட்டுள்ள கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா...

யாழில் நடந்த சோகம் – காதலி வீட்டுக்கு சென்று விபரீத முடிவெடுத்த இளைஞன்.!

யாழ் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கப்பப்புலம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இளைஞன் ஒருவர்...

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் மாற்றம்…..

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் எரிவாயு விலையும் குறைக்கப்படவுள்ளது. இதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு...

More like this