செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைஅதிக வெப்பத்தால் உயிரிழந்த குடும்பஸ்தர்.....

அதிக வெப்பத்தால் உயிரிழந்த குடும்பஸ்தர்…..

Published on

spot_img
spot_img

அதிக வெப்பம் காரணமாக யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த சிவஞானம் ஜெயக்குமார் (வயது 45) என்ற குடும்பபஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் மதியம் 1.45 மணியளவில் மதுபோதையில் இருந்ததை அவரது மகள் அவதானித்துள்ளார். பின்னர் 3.30 மணியளவில் அவர் வெயிலில், கீழே விழுந்து இருந்ததை அவதானித்துள்ளார். அருகில் சென்று பார்த்தவேளை அவர் உயிரிழந்து காணப்பட்டார்.

அவரது சடலம் மீட்கப்பட்டு தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

அவர் அதிக வெப்பம் காரணமாக உடலில் பத்துக்கும் மேற்பட்ட எரிகாயங்கள் ஏற்பட்டு உயிரிழந்ததாக பிரேத பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது. அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். சடலம் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Latest articles

400 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கவுள்ள ஜனாதிபதி

வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 400 பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் வழங்கவுள்ளார். யாழ்ப்பாணம் , தந்தை செல்வா...

அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 23,731 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டுப்பிரிவின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை…..

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளுக்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை விசேட அறிவித்தல்...

லஞ்ச் சீட்டை முற்றாகத் தடை செய்ய நடவடிக்கை….

அடுத்த வருடம் முதல் லஞ்ச் சீட்டை முற்றாகத் தடை செய்ய மத்திய சுற்றாடல் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி...

More like this