இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4 போட்டிகள் கொண்ட Test தொடரின் 4 ஆவது போட்டி நாளை ஆரம்பமாக உள்ளது.
ஏற்கனவே முதல் 2 போட்டிகளில் வெற்றிபெற்று Border Gavaskar Trophy ஐ தக்கவைத்த இந்தியா 3 ஆவது போட்டியில் அதிர்ச்சி தோல்வி அடைந்திருந்தது.
இந் நிலையில் இந்திய அணி WTC இன் இறுதி போட்டிக்கு தேர்வாவது கேள்விக் குறியாகியுள்ளது. நாளை ஆரம்பமாகும் போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் WTC இன் இறுதி போட்டியில் மோதும். அவ்வாறு வெற்றி பெறத் தவறும் பட்சத்தில் இலங்கை நியூசுலாந்து அணிகளின் Test தொடர் முடிவை பொறுத்து இந்திய அணியின் தேர்வு அமையும்.