இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான Test தொடர் நாளை ஆரம்பமாக உள்ளது. 2 போட்டிகள் கொண்ட Test தொடரின் முதலாவது போட்டி நாளை Christchurch மைதானத்தில் ஆரம்பமாகிறது.
இலங்கை அணி இன்னமும் WTC இன் இறுதி போட்டிக்கு தேர்வாகும் வாய்ப்பை கொண்டுள்ளமையால் இலங்கை அணிக்கு மிக முக்கியமான தொடராக இத் தொடர் அமைந்துள்ளது.
இத் தொடரின் 2 போட்டிகளிலும் இலங்கை அணி வெல்லும் பட்சத்தில், இந்திய அணி ஆஸ்ட்ரேலியா அணியை வெற்றி கொள்ளத் தவறின் இலங்கை ஆஸ்திரேலிய அணியுடன் WTC இன் இறுதி போட்டியில் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.