WhatsApp நிறுவனம் பயனர்களிடம் ஒரு சேவையை பயன்படுத்த வைக்க அசத்தலான யுக்தியை கையாள முடிவு செய்துள்ளது. அதன்படி அதிகாரப்பூர்வ Corporate Support வலைப்பக்கத்தில் Cashback பற்றிய தகவல் இடம்பெற்றுள்ளது.
2017 ஆம் ஆண்டு முதல் Payment சேவையை வழங்க WhatsApp நிறுவனம் முயற்சி செய்து வருகிறது.
குறைந்தபட்சம் 30 நாட்களாக Payment சேவையை பயன்படுத்தி வருவோருக்கு மட்டும் இந்த சலுகையை WhatsApp முதற்கட்டமாக வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு November மாதமளவில் Cashback Rewardகளை வழங்குவதற்கான சோதனையை மேற்கொண்டது.
Cashback சலுகையின் மூலம் WhatsApp நிறுவனம் மொபைல் Payment சந்தையில் ஆழமாக கால்பதிக்க முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.