தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பெண்களுக்கான T20 உலகக்கிண்ண தொடரில் தென்னாப்பிரிக்க அணியை இறுதி போட்டியில் வீழ்த்தி 6 ஆவது முறையாக சாம்பியன் ஆகியுள்ளது ஆஸ்திரேலியா.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலியா Mooney இன் 74 ஓட்டங்களின் உதவியுடன் 156 ஓட்டங்களைப் பெற்று கொண்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்க அணிக்கு Laura Wolvaardt 61 ஓட்டங்களைப் பெற்று நம்பிக்கை அளித்திருந்தாலும் 137 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 19 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது.
ஆஸ்திரேலியா அணி T20 உலக கிண்ணத்தை 6 ஆவது முறையாக கைப்பற்றி இணையற்ற ஜாம்பவான்களாக முடிசூடியுள்ளது.